Thanjavur

News March 29, 2024

தஞ்சாவூர் அருகே மாதிரி வாக்குப்பதிவு

image

பேராவூரணி அருகே வீரியங்கோட்டை-உடையநாடு ராஜராஜன் நர்சரி, பிரைமரி பள்ளியில் மாணவ-மாணவிகள் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க பெற்றோர்களிடம் மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இது தத்ரூபமாக வாக்கு பதிவு நடைபெறுவது போலவே இருந்தது. குழந்தைகள் அமைதியான முறையில் வாக்கு பதிவு செய்தனர்.

News March 29, 2024

கும்பகோணம்: அடையாள அட்டையை ஒப்படைக்க முடிவு

image

கரும்புக்கான நிலுவை தொகையை வழங்கக் கோரி திருஆரூரான் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள், கும்பகோணம் கோட்டாட்சியரகத்துக்கு நேற்று(மார்ச் 28) வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைக்க முடிவு செய்து வந்தனா். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினா், உரிய அனுமதி பெற்ற பின்பு சந்திக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா். இதை ஏற்ற விவசாயிகள் மாா்ச் 30ம் தேதி சந்திப்பதற்கான மனுவை அளித்து சென்றனர்.

News March 29, 2024

பாபநாசம்: ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.64 ஆயிரம் பறிமுதல்

image

பாபநாசம் அருகே ரெகுநாதபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி குழுவினர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவாரூரை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் வந்த காரை சோதனை செய்தனர். அப்போது ரூ.64 ஆயிரத்து 680 எடுத்து சென்றது தெரிய வந்தது. இந்த பணத்திற்கு அவர்களிடம், உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை பாபநாசம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

News March 29, 2024

கும்பகோணத்தில் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி

image

கும்பகோணத்தில் நேற்று(மார்ச் 28) அனைத்து தேவாலயங்களிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, புனித வெள்ளியையொட்டி இன்று (மார்ச் 29) காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை சிறப்பு ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிலுவை பாதை நிகழ்ச்சி நடக்கிறது.

News March 28, 2024

தஞ்சாவூர் அருகே மோதல்: 4 பேர் கைது

image

பூதலூர் அருகே குணமங்கலத்தை சேர்ந்தவர் சுதீஷ் (25). இவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த கிரி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கிரி, ஜீவா, குணால், குமார் ஆகியோர் சுதீஷ் வீட்டிற்கு சென்று, அவரிடம் தகராறு செய்து சரமாரியா தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சுதீஷ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குணாலை போலீசார் கைது செய்தனர்.

News March 28, 2024

தஞ்சையில் கோலம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

image

தஞ்சாவூர் மாநகராட்சி மேலவீதியில் மாநகராட்சி சார்பில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நேர்மையாக 100% வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு வண்ண கோலப் போட்டி இன்று(மார்ச் 28) நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர். இதில் பெண்கள் ஆர்வமுடன் கோலமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News March 28, 2024

பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ.6.16 லட்சம் விடுவிப்பு

image

தஞ்சாவூரில் மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6.16 லட்சம் மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின்படி, தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அத்தொகைகள் உடனடியாகத் விடுவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2024

தஞ்சாவூர்: நெற்கதிா்களுடன் வந்த வேட்பாளர்

image

தஞ்சாவூா் மக்களவை தொகுதியில் நேற்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்குமாா் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக கையில் நெற்கதிா்கள், கரும்புகளை ஏந்தி வந்தார். வேட்பாளா் செந்தில்குமாருடன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் பி.ஆா்.பாண்டியன், தலைவா் எல். பழனியப்பன் உடன் இருந்தனர்.

News March 28, 2024

ரத்த சோகையிலிருந்து மீண்ட கா்ப்பிணிக்கு வளைகாப்பு

image

தஞ்சாவூா் மாவட்டம் கரந்தை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் மீண்ட பூனம் என்ற கா்ப்பிணி பெண்ணுக்கு நேற்று(மார்ச் 27) வளைகாப்பு விழா நடைபெற்றது. கரந்தை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவில் மாநகர நல அலுவலா் சுபாஷ் காந்தி தலைமையில், மருத்துவா் கே.மணிமேகலை முன்னிலையில் பூனத்துக்கு வளைகாப்பு நடைபெற்றது.

News March 28, 2024

பட்டுக்கோட்டையில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

image

பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் உத்தரவின்படி நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவலர் நெடுமாறன், நகர் அமைப்பு அலுவலர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் மற்றும் மணிக்கூண்டு பகுதிகளில் நேற்று நடைபெற்றது. அப்போது, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

error: Content is protected !!