India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் வகையில் ஓய்வறைகள் ஏற்கெனவே தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து பராமரிப்பு ஐஆர்சிடிசி நிர்வாகத்திடம் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்படைத்தது. அதன்படி நேற்று 10 குளிரூட்டப்பட்ட அறைகள் புனரமைக்கப்பட்டு, அதனை பயன்பாட்டுக்கு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளார் அன்பழகன் திறந்து வைத்தார்.
தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் அருகே குருங்களூரைச் சோ்ந்தவா் மாணிக்கவாசகம் (59). ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்.இவா் தனது வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து பசு மாடுகள் வளா்த்து வருகிறாா்.இக்கொட்டகையிலும் , அருகிலிருந்த வைக்கோல் கட்டுகளிலும் நேற்று அதிகாலை தீ பற்றி எரிந்தது.தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா்.இந்த விபத்தில் ஒரு பசு மாடு உயிரிழந்தது.
கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூரில் மகா மாரியம்மன், சுந்தர மகாகாளியம்மன் கோவிலில் தீமிதி விழா கடந்த 19- ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு மகா மாரியம்மன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா புறப்பாடு நடக்கிறது. மாலை 6 மணிக்கு தீமிதி விழா நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தஞ்சையை அடுத்துள்ள சிவாஜி நகர் ஆபிரகாம் பண்டிதர் நகரை சேர்ந் தவர் கஸ்தூரி (வயது62). நேற்று முன் தினம் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கஸ்தூரி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துள்ளனர். இதுகுறித்து கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சை தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்ததிற்க்கு ஆதரவு திரட்டுவதற்காக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தஞ்சை வந்தார். அப்போது அவர் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரை சந்தித்து பேசினார். அண்ணாமலைக்கு கிருஷ்ணசாமி வாண்டையார் ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என இருவரும் கூறினர்.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 12 பேர் போட்டியிடுகின்றனர்.
முரசொலி (தி.மு.க.)
சிவநேசன் (தே.மு.தி.க)
முருகானந்தம் (பா.ஜனதா கட்சி)
ஜெயபால் (பகுஜன் சமாஜ் கட்சி)
ஹிமாயூன் கபீர் (நாம் தமிழர் கட்சி)
பொறி,அர்ஜூன் (சுயே)
எழிலரசன் (சுயே)
கரிகாலசோழன் (சுயே)
சந்தோஷ் (சுயே)
சரவணன் (சுயே)
செந்தில்குமார் (சுயே)
ரெங்கசாமி (சுயே)
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக. உரிய பாதுகாப்புடன் நடத்த வலியுறுத்தியும் பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகின்றனர். பந்தநல்லூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இதில் 80-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சையை அடுத்த மேலவஸ்தாசாவடி, ராவுசாப்பட்டி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் இருந்த 50 கிலோ எடை கொண்ட 20 மூட்டை ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வினோத் என்ற நவநீதகிருஷ்ணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அம்மாப்பேட்டை அருகே கோவிலூர் கள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் சின்னப்பா(59). இவரது மனைவிகள் செல்வராணி(55), ராணி(54) இருவரும் சகோதரிகள் ஆவர். இவரது பேரன் ஹரிஹரன்(10) நேற்று முன்தினம் இரவு பேரனை பஸ்சில் ஏற்றி விடுவதற்காக அழைத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தஞ்சையில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற கார் இருவர் மீதும் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கவிஞர் தமிழ்ஒளி 60ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நேற்று தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள கவிஞர் தமிழ்ஒளி சிலைக்கு, தஞ்சை தமுஎகச தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், தமிழ்ஒளி நூற்றாண்டுக்குழு பொருளாளரும், கல்வியாளருமான தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
Sorry, no posts matched your criteria.