Thanjavur

News March 21, 2024

தஞ்சாவூர்: இளைஞர் கொலை… அதிரடி தீர்ப்பு

image

திருவிடைமருதூர் தாலூகா ஆவணியாபுரத்தில் இன்ஜினியரிங் மாணவர்  முஹம்மது முன்தஸிரை  (19), காதல் விவகாரத்தில் நண்பர்களே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் இஜாஸ் அகமது (20),  ஜலாலுதீன் (19), சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலை வழக்கில் இஜாஸ் அகமது, ஜலாலூதின் ஆகியோருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

News March 21, 2024

தஞ்சாவூர் தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

திமுக-வில் தஞ்சாவூர் தொகுதியில் 1996ஆம் ஆண்டிலிருந்து ஆறு தேர்தல்களாக தொடர்ந்து வெற்றி பெற்று வருபவர் பழனிமாணிக்கம். இந்த முறையும் அவருக்கே வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், புதுமுகமான முரசொலியைக் களமிறக்கியிருக்கிறது திமுக தலைமை. முரசொலி, 2014 முதல் 20 வரை திமுக-வின் பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். 2022இல் இருந்து தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலாளராக உள்ளார்.

News March 21, 2024

தஞ்சாவூர்: முதியோர், மாற்றுத் திறனாளிகள் கவனத்திற்கு!

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள்(85 வயதிற்கு மேற்பட்ட) மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 21, 2024

தஞ்சையில் மழைக்கு வாய்ப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று(மார்ச் 21) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில், தஞ்சாவூர், திருவள்ளூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த மழை குளுமையை ஏற்படுத்தும்.

News March 21, 2024

தஞ்சை: 6 முறை எம்பியாக இருந்தவருக்கு வாய்ப்பு மறுப்பு!

image

2024 மக்களவை தேர்தலில், தஞ்சாவூர் தொகுதிக்கு திமுக சார்பில் புதுமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முரசொலி, இளங்கலை பட்டப் படிப்பும், இளங்கலை சட்டப்படிப்பும் முடித்துள்ளார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பழனி மாணிக்கம் எம்பிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர் 6 முறை போட்டியிட்டு வென்று எம்பியானது குறிப்பிடத்தக்கது.

News March 20, 2024

தஞ்சாவூரில் முதல்வர் ஸ்டாலின்

image

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல்19ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை மேற்கொள்ளவுள்ள தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மார்ச் 23ம் தேதி தஞ்சையில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

News March 20, 2024

தஞ்சாவூர் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு

image

வரும் 2024-நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக-வுக்கு தஞ்சாவூர் உள்பட 5 தொகுதிகள் ஒதுக்குக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் கூட்டாக அறிவித்தனர். இதனையடுத்து தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் போட்டியிட உள்ளனர். விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது.

News March 20, 2024

தஞ்சை திமுக வேட்பாளர் இவர்தான்!

image

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக முரசொலி அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

News March 20, 2024

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டம்!

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.

News March 19, 2024

தஞ்சாவூர் அருகே பெண் செய்த செயல்

image

கும்பகோணம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளை பராமரிக்கும் வேலை செய்து வந்த கோகிலா (50) என்ற பெண், அப்பள்ளியில் பயிலும் 5 வயது மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பெற்றோர் அளித்த புகாரி., அப்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!