Thanjavur

News February 4, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.03) இரவு 10 முதல் இன்று (பிப்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 3, 2026

தஞ்சை: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<> ‘Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 3, 2026

தஞ்சை: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு<> உழவன் App <<>>மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

News February 3, 2026

பாபநாசத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம்.. திடீர் திருப்பம்

image

திருப்பாலைத்துறை அவுல்கார தெரு சந்து பகுதியில் கடந்த வாரம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தீயில் கருகிய நிலையில் உயிரிழந்து இடந்தார். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்தவர் திருப்பாலைத்துறை வெள்ளை பிள்ளையார் தெருவை சேர்ந்த முகமது அலி என்பதும், உடல்நலக்குறைவால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

News February 3, 2026

தஞ்சை வந்தடைந்த 1,300 டன் பொட்டாஷ் உரம்

image

தஞ்சை மாவட்டத்தில் முப்போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்காக, தூத்துக்குடியில் இருந்து 1300 டன் பொட்டாஷ் உரம் நேற்று ரயிலில் தஞ்சை ரயில் நிலையத்திற்கு வந்தது. இந்த உரங்கள் தனியார், கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளன. டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகளுக்காக இந்த உரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

News February 3, 2026

தஞ்சை: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

தஞ்சை மக்களே! இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் தஞ்சை மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். SHARE பண்ணுங்க!

தஞ்சை: WhatsApp-ல் சான்றிதழ்கள்! HI சொல்லுங்க

image

தஞ்சை மாவட்ட மக்களே இனி இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை பெற அரசு அலுவலகங்கள் அல்லது இசேவை மையங்களுக்கு நேரில் அலைய வேண்டிய அவசியமில்லை. இனி அவற்றை வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை SHARE பண்ணுங்க.

News February 3, 2026

தஞ்சாவூரில் 502 கிலோ குட்கா பறிமுதல்

image

தஞ்சாவூரில் கரந்தை அருகே கோடியம்மன் கோயில் பகுதியில் நேற்று காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் குட்கா விற்றுக் கொண்டிருந்த விருதுநகர் செல்வராஜ் (40) மற்றும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.ஆதில் (22) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்து 502 கிலோ குட்கா, ஒரு கார், போலி பதிவு எண் தகடு, 2 கைப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

error: Content is protected !!