Thanjavur

News May 16, 2024

தஞ்சை: மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு

image

திருவையாறு, ஒரத்தநாடு, தஞ்சாவூர் ஆகிய பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி மையங்களில் 2024 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 07ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொழிற் பயிற்சி நிலையங்கள், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் மாணவர்கள் இலவசமாக விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 16, 2024

தஞ்சாவூர் அருகே விபத்து

image

பாபநாசம் அருகே ராஜகிரி மெயின் ரோட்டில் கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற சரக்கு லாரி அதிவேகமாக வந்து எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ராஜகிரி நாயக்கர் தெருவை சேர்ந்த யுவராஜா 33 என்பவர் மீது மோதியது. இதில் யுவராஜா இடது காலில் பலத்த அடிப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 16, 2024

கல்லணை கால்வாயில் 22 டன் குப்பைகள் அகற்றம்.

image

தஞ்சாவூர் கல்லணை கால்வாயில் அதிக அளவில் குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கி இருந்தன. இதனை மாநகராட்சி சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. சிவாஜி நகரில் இருந்து 20கண் பாலம் வரை சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் நடைப்பெற்ற பணியில் 690 ஊழியர்கள் ஈடுபட்டனர். 2 நாட்கள் நடைபெற்ற இந்த பணியில் பாட்டில்கள், துணிகள், தேங்காய் மட்டைகள் என 22 டன் குப்பைகள் கால்வாயில் இருந்து அகற்றப்பட்டன.

News May 16, 2024

தஞ்சாவூர் மழைப்பொழிவு விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மே.15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பட்டுக்கோட்டை பகுதியில் 16 செ.மீட்டரும், அதிராமபட்டினம், மதுக்கூர் ஆகிய பகுதிகளில் 11 செ.மீட்டரும் அதிராமபட்டினம் AWS-யில் 10 செ.மீட்டரும், பேராவூரணியில் 6 செ.மீட்டரும், திருவிடைமருதூரில் 5 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியிருந்தது.

News May 16, 2024

தஞ்சாவூர் மழைக்கு வாய்ப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

பட்டுக்கோட்டையில் 16 செ.மீ மழை

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

News May 16, 2024

தஞ்சையை வெளுக்கும் மழை

image

தமிழகத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், ஆங்காங்கு கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர், திருவையாறு, அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 10.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், தஞ்சை மாவட்டத்தில் இன்று மிதமானது முதல் கனமழை பெய்து வருகின்றது.

News May 15, 2024

17 வாகனங்களின் உரிமம் ரத்து

image

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில பட்டுக்கோட்டையில் நேற்று (மே.14) நடந்த பள்ளி வாகனங்கள் ஆய்வின் போது முறையாக பராமரிக்காத 17 வாகனங்கள் உரிமம் ரத்து செய்யப் பட்டது. பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி திடலில் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளைச் சேர்ந்த 32 தனியார் பள்ளிகளில் உள்ள 218 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

News May 15, 2024

பெரிய கோவிலை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

image

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கும் கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கும் -சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. புகழ் மிகுந்த கோவிலை காண தமிழகம் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகளவில் உள்ளது.

News May 15, 2024

குளிர்பான கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

image

தஞ்சை கலெக்டர் உத்தரவுப்படி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.சித்ரா அறிவுறுத்தலின் பேரில், பட்டுக்கோட்டை நகர, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் நேற்று (மே.14) பட்டுக்கோட்டையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் மூலம் ஹோட்டல் குளிர்பான கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தரம் குறைவான பொருட்களை விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

error: Content is protected !!