Thanjavur

News May 18, 2024

ஒய்வு பெற்ற விஏஓ கொலை 2 பேர் கைது 

image

ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜமனோகரன்(ஒய்வு பெற்ற விஏஓ). மே16-ல் வீட்டின் குளியலறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அவரது மருமகன் ராஜ்குமார் அவரது நண்பர் சரவணன் ஆகிய இருவரை கைது செய்தனர். மூத்த மகள் மனோரம்யாவிற்கு அவரது கணவர் ராஜகுமாருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். மனைவியை பழிவாங்க மாமனாரை கொன்றதாக தெரிய வந்தது.

News May 18, 2024

1,250 டன் அரிசி அனுப்பி வைப்பு

image

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல் அரவைக்கு அனுப்பி அரிசியாக பெறப்பட்டு தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு பெறப்பட புழுங்கல் அரிசி 1,250 டன் வேலூர் மாவட்டத்திற்கு 21 வேகன்களில் சரக்கு இரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அனுப்பி வைக்கப்பட்ட அரிசி பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கபட்டுள்ளது.

News May 18, 2024

தஞ்சையில் மழைக்கு வாய்ப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மே.18) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 18, 2024

தஞ்சை மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் இன்று (மே.18) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தஞ்சையில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 18, 2024

சிறப்பு மருத்துவ முகாம்

image

தஞ்சை, ஆடுதுறையில் வழக்கறிஞர் ம.க.ராஜா நினைவு தினத்தை முன்னிட்டு இலவச இரத்த தானம் மற்றும் உயர்தர சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாமாக முன்வந்து ரத்ததானம் வழங்கினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு சர்க்கரை, இரத்த அழுத்தம், இசிஜி உள்ளிட்ட உயர்தர மருத்துவ சேவைகளுடன் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

News May 17, 2024

திமுக நிர்வாகி கொலை வழக்கில் சகோதரர் கைது

image

நெய்குன்னத்தை சேர்ந்த திமுக நிர்வாகி கலைவாணன்‌ 12 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரது பெரியப்பா மகனான அருண்பாண்டியனை கைது செய்துள்ளனர். அருண்பாண்டியன் 25 லட்சம் ரூபாயை கலைவாணனிடம் கடனாக பெற்றுள்ளார். இதனை திருப்பி கேட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அருண்பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News May 17, 2024

தஞ்சை: கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

image

நீடாமங்கலத்தை சேர்ந்தவர் ஹரிகரன் பழக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 28ஆம் தேதி தஞ்சை, வல்லம் புறவழிச் சாலையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தொழில் போட்டி காரணமாக நடைபெற்ற இந்தப் கொலையில் ஏற்கனவே ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது கூலிப்படையை சேர்ந்த அஜித், தென்னரசு ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

News May 17, 2024

தஞ்சை: மூன்று நாட்களுக்கு சூறைக்காற்று

image

தஞ்சாவூர் மாவட்டம், கடலோரப் பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு (மே.17- 20) பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 17, 2024

தஞ்சாவூர்: மழைக்கு வாய்ப்பு!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தஞ்சாவூரில்லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

தஞ்சை: 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 17) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!