Thanjavur

News March 28, 2024

தஞ்சாவூர் அருகே மோதல்: 4 பேர் கைது

image

பூதலூர் அருகே குணமங்கலத்தை சேர்ந்தவர் சுதீஷ் (25). இவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த கிரி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கிரி, ஜீவா, குணால், குமார் ஆகியோர் சுதீஷ் வீட்டிற்கு சென்று, அவரிடம் தகராறு செய்து சரமாரியா தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சுதீஷ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குணாலை போலீசார் கைது செய்தனர்.

News March 28, 2024

தஞ்சையில் கோலம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

image

தஞ்சாவூர் மாநகராட்சி மேலவீதியில் மாநகராட்சி சார்பில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நேர்மையாக 100% வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு வண்ண கோலப் போட்டி இன்று(மார்ச் 28) நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர். இதில் பெண்கள் ஆர்வமுடன் கோலமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News March 28, 2024

பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ.6.16 லட்சம் விடுவிப்பு

image

தஞ்சாவூரில் மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6.16 லட்சம் மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின்படி, தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அத்தொகைகள் உடனடியாகத் விடுவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2024

தஞ்சாவூர்: நெற்கதிா்களுடன் வந்த வேட்பாளர்

image

தஞ்சாவூா் மக்களவை தொகுதியில் நேற்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்குமாா் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக கையில் நெற்கதிா்கள், கரும்புகளை ஏந்தி வந்தார். வேட்பாளா் செந்தில்குமாருடன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் பி.ஆா்.பாண்டியன், தலைவா் எல். பழனியப்பன் உடன் இருந்தனர்.

News March 28, 2024

ரத்த சோகையிலிருந்து மீண்ட கா்ப்பிணிக்கு வளைகாப்பு

image

தஞ்சாவூா் மாவட்டம் கரந்தை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் மீண்ட பூனம் என்ற கா்ப்பிணி பெண்ணுக்கு நேற்று(மார்ச் 27) வளைகாப்பு விழா நடைபெற்றது. கரந்தை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவில் மாநகர நல அலுவலா் சுபாஷ் காந்தி தலைமையில், மருத்துவா் கே.மணிமேகலை முன்னிலையில் பூனத்துக்கு வளைகாப்பு நடைபெற்றது.

News March 28, 2024

பட்டுக்கோட்டையில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

image

பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் உத்தரவின்படி நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவலர் நெடுமாறன், நகர் அமைப்பு அலுவலர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் மற்றும் மணிக்கூண்டு பகுதிகளில் நேற்று நடைபெற்றது. அப்போது, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News March 27, 2024

 தி.மு.கவேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் முரசொலி இன்று  தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கப் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில், எஸ்.எஸ் பழநி மாணிக்கம் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உடன் இருந்தனர்.

News March 27, 2024

பைக் மோதி மூதாட்டி பலி

image

மைக்கேல்பட்டியைச் சேர்ந்த கலியபெருமாள், மனைவி சம்பூர்ணம்(70). இவர் சம்பவத்தன்று சாலையோரம் நடந்து சென்றபோது பின்புறம் வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியதில் படுகாயமடைந்தார். திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 27, 2024

தஞ்சாவூர்: புகார் செய்ய எண்கள் அறிவிப்பு

image

தஞ்சாவூரில் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்த புகார்களுக்கு, பொதுப் பாா்வையாளரான கிகேட்டோ சேமவை 93639 70331 என்ற எண்ணிலும், தேர்தல் செலவினங்கள் தொடா்பாக செலவின பாா்வையாளரான ஜன்வி திவாரியை 93639 62884 என்ற எண்ணிலும், சட்டம் – ஒழுங்கு மற்றும் சட்டத்துக்கு புறம்பான விதிமீறல்களுக்கு காவல் பாா்வையாளரான சரணப்பாவை 93639 72586 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 27, 2024

வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்

image

தஞ்சாவூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி ஆரம்பித்து நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!