Thanjavur

News June 5, 2024

6 வது இடத்தை பிடித்த நோட்டா

image

தஞ்சாவூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் உட்பட 12 பேர் போட்டியிட்டனர். திமுக வெற்றி பெற்ற நிலையில், தேமுதிக வேட்பாளர் சிவநேசனைத் தவிர மீதமுள்ள 10 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். இதில் ஆறு சுயேச்சை வேட்பாளர்களை விட நோட்டா அதிக வாக்குகள் பெற்றது. நோட்டாவிற்கு 12,833 வாக்குகள் கிடைத்தன. இதனால் நோட்டா 6வது இடத்தை பிடித்தது.

News June 4, 2024

நாத வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர்‌ டெபாசிட் இழப்பு

image

திமுக வேட்பாளர் ச.முரசொலி 5,02,245 வாக்குகள், தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 1,82,662 வாக்குகள் பெற்றுள்ளார். டெபாசிட் தொகையை திரும்ப பெற வேண்டுமானால் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்கை வேட்பாளர்கள் பெற்றிருக்க வேண்டும். அதன்படி 1,71,541 வாக்குகளுக்கு மேல் திமுக வேட்பாளர் முரசொலியும்,தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசனும் பெற்றுள்ளனர். இதனால் பாஜக நாதக,  உட்பட 10 பேர் டெபாசிட் இழந்தனர்.

News June 4, 2024

தஞ்சாவூர் தொகுதியில் திமுக வெற்றி

image

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். தபால் வாக்குகள் மற்றும் 23 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் முரசொலி 5,02,245 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் சிவநேசன் 1,82,662 வாக்குகளும், பாஜக 1,70,613 வாக்குகளும், நாத 1,20,293 வாக்குகள் பெற்றனர்.இதன் மூலம் 3,19,583 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முரசொலி வெற்றி பெற்றுள்ளார்.

News June 4, 2024

தஞ்சாவூரில் திமுக 2,91,501 வாக்குகள் முன்னிலை

image

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 19வது சுற்றுகள் முடிவடைந்த நிலையில் திமுக முன்னிலையில் உள்ளது. திமுக – 4,61,662, தேமுதிக – 1,70,161,பாஜக- 1,59,652, நாத- 1,09,582, 2,91,501 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முரசொலி முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

தஞ்சாவூரில் திமுக தொடர்ந்து முன்னிலை

image

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14வது சுற்றுகள் முடிவடைந்த நிலையில் திமுக முன்னிலையில் உள்ளது. திமுக- 3,41,784, தேமுதிக- 1,27,794 பாஜக- 1,14,788, நாத – 82,029, 2,13,990 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முரசொலி முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

தஞ்சையில் 12வது சுற்று நிலவரப்படி திமுக முன்னிலை

image

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் தொடர்ந்து திமுக முன்னிலையில் உள்ளது. திமுக- 2,92,583, தேமுதிக- 1,10,487, பாஜக – 97,906, நாத – 71,090, 1,82,096 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முரசொலி முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

தஞ்சாவூரில் 11வது சுற்று நிலவரம்

image

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 11வது சுற்று முடிவடைந்த நிலையில் திமுக முன்னிலையில் உள்ளது. திமுக – 2,69,409, தேமுதிக – 1,01,686, பாஜக – 89,235, நாத – 66,326, 1,67,723 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முரசொலி முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

தஞ்சாவூர்: திமுக வேட்பாளர் முன்னிலை

image

தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் 8வது சுற்று முடிவில் திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. திமுக வேட்பாளர் 1,96545 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தேமுதிக வேட்பாளர் 77,034 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் 63,428 வாக்குகள் பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் 49,331 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும், 1,19,511 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முரசொலி முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

தஞ்சாவூர்: 7வது சுற்று நிலவரம்

image

தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் 7வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், திமுக வேட்பாளர் 1,72,043 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தேமுதிக வேட்பாளர் 67,728 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் 54,399 வாக்குகள் பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் 43,832 வாக்குகள் பெற்றுள்ளார். மொத்தம் 1,04,315 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது.

News June 4, 2024

தஞ்சாவூர்: ஒன்பதாவது சுற்று நிலவரம்

image

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஒன்பது சுற்றுகள் முடிவடைந்த நிலையத்தில், திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது‌.
திமுக – 2,19,026, தேமுதிக – 84,594, பாஜக – 72,147, நாத – 54,896
1,34,432 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முரசொலி முன்னிலையில் உள்ளார்.

error: Content is protected !!