India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கும்பகோணம் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மங்களம் என்ற யானை உள்ளது. 44 ஆண்டுகளாக, கோவில் நிர்வாகத்தால் இந்த யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மங்களம் யானையின் முழுமையான பராமரிப்பு செலவினத்திற்கான மாதந்தோறும் ரூ.60,000 வீதம் ஆண்டுக்கு ரூ.7 லட்சத்து 20 ஆயிரத்தை தனியார் நிதி நிறுவனம் நன்கொடையாக வழங்கியது.
மதுக்கூரை அடுத்த சிரமேல்குடி பாலாயி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பவதாரணி (22). இவர் நர்சாக வேலை பார்த்து வந்தார். (ஏப்,26) வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண்எண்ணெய் கேன் தவறி அடுப்பு மீது விழுந்து தீ உடல் முழுவதும் பரவியது. அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி பவதாரணி பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை தேரோட்டத்தின் போது ஆங்காங்கே பக்தர்கள் வீசிய குடிநீர் பாட்டில் நெகிழி பொருட்கள் மற்றும் அன்னதானம் நடைபெற்ற இடங்களில் இருந்த வாழை இலை, பாக்கு மட்டைகள் உள்ளிட்ட உணவு கழிவுகளை தூய்மை பணியாளர்கள் உடனுக்குடன் அகற்றி தூய்மைப்படுத்தினர். இந்நிலையில் இவர்களைப் பாராட்டி நேற்று தனியார் அறக்கட்டளை சார்பில் சிக்கன் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பகுதி நேரமாக மாவட்டம், தாலுகா வாரியாக பணியாற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் திறன் உடையவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 8340022122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், தேர் சாலையில் பதிந்து விபத்து ஏற்பட்டது. இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு தேர் வடிவமைப்பை இந்த ஆண்டு மாற்ற யார் உத்தரவிட்டது என விளக்கம் தரக்கோரி தஞ்சை இந்து சமய அறநிலை துறை மற்றும் தேவஸ்தான உயர் அதிகாரிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று (ஏப்.26) 102.2 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் ஆங்காங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே கீழக்கோவில் பத்து கிராமம், அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் வனரோஜா. இவரது மகள் சரண்யா(14), 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அடிக்கடி செல்போன் பார்த்ததாக தாய் கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த சரண்யா, நேற்று(ஏப்.26) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூரில் நேற்று (ஏப்.25) 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை, 39° – 42° செல்சியஸ் பதிவாகக்கூடும்.
ஏப்.23ம் தேதி சேதுபாவாசத்திரம் கடற்பகுதியை சேர்ந்த முருகேசன், ஹரிஹரன், பாலசிங்கம் ஆகியோர் தங்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை உயிருடன் மீட்டு கடலில் விட்டனர். இந்நிலையில் அரிய வகை உயிரினங்களை பாதுகாத்த இந்த 3 பேர் உட்பட 15க்கும் மேற்பட்டோருக்கு, மே.28ம் தேதி கடல் பசு தினத்தில் பாராட்டு விழா நடத்தி ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்படும் என வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24ம் கல்வியாண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான முன்பதிவு வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த பயிற்சி செப்டம்பர் மாதம் தொடங்கப்படுகிறது. பயிற்சி காலம் ஓர் ஆண்டு ஆகும். தமிழில் மட்டுமே பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 17 வயது நிரம்பி, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.