India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கும்பகோணம் அருகே ஆரியப்படை கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய புகார் மனுக்கள் வழங்கினர். மேலும் இதில் பல்வேறு துறை சார்பில் 127 பயனாளிகளுக்கு 17 லட்சத்து 72 ஆயிரத்து மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், மொன்னையம்பட்டி புனித அந்தோணியார் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை நாளை வியாழக்கிழமை (11.07.2024) காலை 11.00 மணியளவில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அரசு தலைமை கொறடா (ம) சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாக ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மேலவஸ்தாச்சாவடியில் சமூகநலன் (ம) மகளின் உரிமைத்துறையின் கீழ் ‘தோழி’ என்று விடுதி செயல்பட்டு வருகிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக பெண் மேலாளர்,பாதுகாவலர்,கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன.குறைந்த வாடகையில் இந்த விடுதி செயல்படுகிறது.வெளியூரை சேர்ந்த படிக்கும்,பணிபுரியும் பெண்கள் விடுதியில் சேர www.tnwwhcl.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க தஞ்சை ஆட்சியர் அறிவிப்பு.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறும் திட்டத்தில் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும்.2019ம் ஆண்டு ஜுன்-30 (அ) அதற்கு முன் பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.தகுதியுடையவர்கள் https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் பெற்று செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் தீபக்ஜேக்கப் அறிவிப்பு
தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் தமிழ் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக தமிழ் வளர்ச்சித்துறை ஆண்டுதோறும் தமிழ்ச்செம்மல் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்ச்செம்மல் விருது பெறுவதற்கு www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தியுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்க கூட்டம் வருகிற 12ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக அளித்து தீர்வு காணலாம் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்டத்திற்கு ஒரு தமிழ் ஆர்வலருக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படுகிறது. இதில், ரூ.25,000 ரொக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை <
கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்னை அமைக்க 50% மானியம் வழங்கும் திட்டம் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆர்வமும் – திறமையும் உள்ள கிராமப்புற பயனாளிகளுக்கு கோழி கொட்டகை, 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றுக்கான மொத்த செலவில் 50% மானியமாக ரூ.1,56,875 வழங்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள் வரும் ஜூலை 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று (ஜூலை 7) இரவு 7 மணி வரை மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தஞ்சை மாவட்டத்தில் இரவு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மைதானத்தில் வருகிறது 12 தேதி முதல் 14 தேதி வரை மூன்று நாட்கள் உணவு திருவிழா நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தின் தலைசிறந்த உணவு வகைகள் கொண்ட 100 க்கும் மேற்பட்ட உணவகங்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த ஏற்பாடுகளை சுற்றுலா வளர்ச்சி குழுமம் செய்து வருவதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.