India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் டிஎஸ்பிக்கள் வரை அனைவரும் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என நேற்று கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவா ஆசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நேற்று இரவு முழுவதும் தஞ்சை எஸ்பி மேற்பார்வையில் காவல் துறையினர் துப்பாக்கிகளுடன் சோதனை மேற்கொண்டனர்.
திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளராக பொறுப்பேற்றுள்ள தயாளகுமார் நேற்று கல்லணையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அணையை நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டப் பணிகளையும், கல்லணை கால்வாய் தலைப்பில் நடைபெற உள்ள திட்ட பணிகளின் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இதில் ஏராளமான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கலை பண்பாட்டுத் துறை மண்டலக் கலை பண்பாட்டு மையம் சார்பில் தஞ்சை ஐடிஐ மைதானத்தில் தஞ்சை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் மாவட்டம் கலை பண்பாட்டு துறையினர், கும்பகோணம் மேயர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சியை சேர்ந்தவர் மீனவர் அந்தோணி. இவர் 15 தினங்களுக்கு முன்பு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது காற்றின் வேகத்தால் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், மூன்று மீனவர்கள் காப்பாற்றப்பட்டு கரை சேர்ந்த நிலையில், அந்தோணியின் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை. இன்று அவரது குடும்பத்தை முரசொலி எம்.பி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், பாஜக மாநிலத் தலைவர் மீது காங்கிரஸ் கட்சியினர் வீண் குற்றச்சாட்டுகள் பரப்புவதை உடனே நிறுத்த வேண்டும். மேலும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும், இல்லையென்றால் நாங்கள் உருவ பொம்மை எரிப்பு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபம் ஜேக்கப் தலைமையில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினரிடம் இருந்து புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டு, மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நாசாவின் முதல் இந்திய பெண் வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் துணிச்சலை பாராட்டும் வகையில், தைரியம் மற்றும் துணிச்சலுக்கான விருது சமூக நலத்துறை சார்பில், சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதி உடையவர்கள் htpps://awards.tn.gov.in மூலம் விண்ணப்பிக்க ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
தஞ்சை பந்தநல்லுார் ஆய்வாளர் முத்துகிருஷ்ணராஜா ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், எம்.பி தேர்தலில் நின்றால் பெரிய ஆளாகிட முடியுமா, உன்னால் என்னை ஒன்னும் செய்ய முடியாது, துப்பாக்கியால் சுட்டு காலி செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக பாமக செயலாளர் ஸ்டாலின், எஸ்.பியிடம் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் முத்துகிருஷ்ணராஜா ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகையை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.விழிப்புணர்வு ரதத்தினையும் பேரணியையும் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் இன்று ரயிலடியில் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை இயக்குனர் டாக்டர் அன்பழகன் மற்றும் பலர் இருந்தனர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக வல்லத்தில் 60 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் தஞ்சாவூரில் 7 மிமீ, குருங்குளம் 24.60 மிமீ, பூதலூரில் 3.20 மிமீ, ஒரத்தநாட்டில் 5.20 மிமீ, வெட்டிக்காடு 16.40 மிமீ, பட்டுக்கோட்டை 22 மிமீ, அதிராம்பட்டினம் 2.10 மிமீ, மதுக்கூரில் 21.80, பேராவூரணி 7.40 என மாவட்டம் முழுவதும் சராசரியாக 173.30 மிமீ அளவிற்கு மழையளவு பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.