India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் உதவி ஆட்சியர், வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.
சிலம்பவேளாங்காட்டை சேர்ந்த செந்தில்குமார் சாந்தி தம்பதியரின் இரண்டாவது மகன் தனுஷ். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து மருத்துவராகும் கனவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதினார். இதில் அவர் தேர்ச்சி பெறாததால் அவருடைய மருத்துவராகும் கனவு பலிக்கவில்லை. இதனால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்த அவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை வரை மழை பொழிவு விபரம்:தஞ்சையில் 3 மில்லி மீட்டரும், வல்லத்தில் 2 மில்லி மீட்டரும், வெட்டிக்காடு பகுதியில் 21.8 மில்லி மீட்டரும், ஈச்சன் விடுதியில் 10.2 மில்லி மீட்டரும், பேராவூரணியில் 20.2 மில்லி மீட்டரும், நாகுடியில் 24.6 மில்லி மீட்டரும், ஒரத்தநாட்டில் 15.1 மில்லி மீட்டரும், குருங்குளத்தில் 2 மில்லி மீட்டரும் மழை பெய்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் விற்பனை குழு கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் கண்காணிப்பாளர் பிரியாமாலினி தலைமையில் நேற்று நடைபெற்றது. ஏலத்தில் குவிண்டாலுக்கு சராசரி விலையாக ரூ.6,789-க்கும் ஏலம் போனது. ஏலம் போன மொத்த பருத்தியின் மதிப்பு 1.6 கோடி ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் கும்பகோணம், கடலூர், விழுப்புரம், தேனி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், நாலுகால் மண்டபம், அரண்மனைப் பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, திருநாகேஸ்வரம், நடுக்காவேரி, திருவாலம்பொழில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். SHARE NOW!
அதிராம்பட்டினம் அருகே உள்ள செங்கப்படுத்தாங்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் வீரசக்தி (13). 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் நேற்று தனது உறவினரான சக்தி முருகன் (13) என்ற மற்றொரு சிறுவனுடன் வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்ப்பாராத விதமாக குளத்தில் இருந்த சேற்றில் சிக்கி சிறுவன் உயிரிழந்தான். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தொழிலார்களுக்கு விடுப்பு அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக என தொழிலாளர் துறை சார்பில் நேற்று ஆய்வு மேற்கொள்ப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் 163 நிறுவனங்களில் சோதனை செய்ததில், 101 கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளை மீறியது தெரிய வந்தது. இதையடுத்து 101 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக சார்பாக இன்று கும்பகோணத்தில் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சாக்கோட்டை சதீஷ்குமார் தலைமையில் தேசிய கொடியேந்தி மாபெரும் இருசக்கர வாகன பேரணி கும்பகோணம் தாராசுரம் ரவுண்டனா முதல் மகாமககுளம் வரை நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட, மண்டல அணி பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
78ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, அசூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில், கும்பகோணம் வட்டாட்சியர் சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி சிவன் செயல், துணைத் தலைவர் கே.எஸ்.தமிழ்மாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தஞ்சை மாரியம்மன் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி எம்.பி., தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், மேயர் சன் ராமநாதன், எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.