India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் 57 மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலராக சாரதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முன்னதாக திருச்சி மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலராக பணியாற்றியுள்ளார். மேலும், தனியார் பள்ளி கல்வி அலுவலராக இருந்த அமலா தங்கத்தாய் தென்காசி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை, லேசான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான De-Addiction Centre அலுவலகத்தில் 3 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தஞ்சை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாபநாசம் அருகே சுந்தர பெருமாள் கோவில் ரயில்வே கேட்டில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மோதியதில் ரயில்வே மின்சார கம்பி அறுந்து சேதமடைந்தது. இதனால் ஆந்திரா கச்சிகுடாவிலிருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் பாபநாசம் ரயில் நிலையத்திலும், சேலத்தில் இருந்து மாயவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் பண்டாரவாடை ரயில் நிலையத்திலும் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு 18,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால், தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் ஆழமான பகுதிகளில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், கால்நடைகளை ஆழமான பகுதிக்கு செல்லாமல் பாதுகாக்கவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீர் நிலைகளில் செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என தஞ்சை கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் தபால் துறையில் 44,228 காலிப்பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் MERIT பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 236 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியானது. முழு விவரங்களை https://indiapostgdsonline.gov.in/# என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி வரும் 4ஆம் தேதியும், தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி வரும் 5ஆம் தேதியும், காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி வருகிற 6ஆம் தேதியும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. மேலும் தலைப்பு, குறித்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்லூரி கல்வி இணை இயக்குனர் மூலம் அறிவிக்கப்படும் என தஞ்சை ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் காணொலிக் காட்சி வாயிலாக நாளை காலை கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில் கும்பகோணத்தில் உதவி இயக்குனர் நிர்வாக அலுவலக கட்டடமும் – கால்நடை மருத்துவமனை கட்டடமும் (ம) பட்டுக்கோட்டை பெருமகளூரில் கால்நடை மருந்தக கட்டிடமும் (ம) ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆய்வக விலங்கினக் கூடம் போன்று பல்வேறு கட்டடங்களை திறந்து வைக்கிறார் என தஞ்சை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.08.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தஞ்சாவூர் ஒன்றியம் விளார் பகுதியினை சேர்ந்த துளசி என்பவர் தனக்கு சுவாச கருவி வேண்டி விண்ணப்பத்தை தொடர்ந்து அவரது தாயார் ஞானவள்ளியிடம் சுவாச கருவியினை வழங்கினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அறிவிப்பின்படி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சந்திரசேகர மூப்பனார் தஞ்சை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட , மாநகர, வட்டார, சார்பு அணி, பேரூர் நிர்வாகிகள் பட்டியலை இன்று கும்பகோணம் மூப்பனார் பங்களா அலுவலகத்தில் வெளியிட்டார். அப்போது மாநில உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர் ராஜாங்கம், தஞ்சை கிழக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.சங்கர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.