India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விநாயகர் சதுர்த்தியையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகை கிலோ ரூ.450-க்கு விற்பனையானது. ஆனால் இன்று விலை உயர்ந்து கிலோ ரூ.750 முதல் 1000 வரை விற்கப்பட்டது. கனகாம்பரம் பூ கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் முல்லை கிலோ ரூ.750 முதல் ரூ.1000, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.200, ஆப்பிள் ரோஸ் ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை 8 மணி வரை தஞ்சை மாவட்டத்தில் மழை பொழிவு விவரம்: வல்லத்தில் 2 மில்லி மீட்டரும், அயன்குடியில் 2.8 மில்லி மீட்டரும், நாகுடியில் 6.4 மில்லி மீட்டரும், ஒரத்தநாட்டில் 2 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 8 மில்லி மீட்டரும் மழை பெய்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் வெயிலில் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
கல்லணை அருகே கூகூர் பாதை கொள்ளிடம் ஆற்றில் 40 – 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவ்வழியாக சென்ற அப்பகுதி மக்கள் இதை பார்த்து உடனடியாக கோவிலடி வி.ஏ.ஓ ஆனந்திக்கு தெரியப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட வி.ஏ.ஓ, இது குறித்து தோகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் 6, 7 ஆகிய தேதிகளில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று செப் 6-ஆம் தேதி முகாம் நடைபெற்ற நிலையில், நிர்வாக காரணங்களால் இன்று (செப்.7) நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இராஷ்ட்ரிய இந்திய இராணுவ கல்லூரி டேராடூனில் ஜீலை 2025 பருவத்தில் 8ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு 01.12.2024 அன்று தேர்வு நடைபெறவுள்ளது. www.rimc.gov.in இணையத்தில் விண்ணப்பங்கள் பெற்று வருகிற 30.09.2024 தேதிக்குள் விண்ணப்பிக்க கூறப்பட்டுள்ளது. 02.07.2012-க்கு முன்னும் 01.01.2014 பின்னும் பிறந்திருக்க கூடாது. தகுதி உடையவர்கள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் அறிவிப்பு.
தஞ்சை அருகே திருவையாறு பைபாஸ் சாலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், 4 பவுன் தங்கச் சங்கிலியை அறுத்து சென்றனர். வழக்கு பதிவு செய்த தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் நேற்று இரண்டு பேரை கைது செய்தனர். போலீசார் பிடிக்க முயன்ற போது 2 பேரும் கீழே விழுந்ததில் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பூதலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 42 வயது பெண் வேலை முடித்து தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் லிப்ட் கொடுப்பதாக கூறி அப்பெண்ணை அழைத்து சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ராயந்தூரை சேர்ந்த பிரவீன், ராஜ்கபூர் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
குடும்ப வன்முறை மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை உட்பட தீர்வு காணும் பாலின வள மையம் “வானவில் மையம்” திருவிடைமருதூர், திருவோணம் மற்றும் அம்மாபேட்டை ஆகிய வட்டார சேவை மையத்தில் செயல்பட்டு வருகிறது. அம்மாபேட்டை வட்டார இயக்க மேலாளர் 8754990178 பாலின சேவை மைய எண்னிலும் திருவிடைமருதூர் 9965855254 என்ற எண்னிலும் திருவோணம் 6369849825 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் அடையலாம்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய மாநில அளவில் மூன்று கண்காட்சிகள் சென்னையில் வருகிற 21.09.2024 முதல் 06.10.2024 வரை நடைபெற உள்ளது. கைத்தறி, உணவுப் பொருட்கள், பாரம்பரிய அரிசிகள், பனை ஒலை, கொலுபொம்மைகள், சிறிய வகை நினைவு பரிசுகள் காட்சி மற்றும் விற்பனைக்கு அரங்கம் அமைக்க வருகிற நாளைக்குள் (செப்.7) https://exhibition.mathibazaar.com/login விண்ணப்பிக்கலாம்.
ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோரிடமிருந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளை தேர்வு செய்து அவர்கள் சுயதொழில் செய்து நிலையான வருமானம் பெற, ஒரு பயனாளிக்கு ரூ.50,000/- வீதம் 200 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி செலவில் மானியம் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.