India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நாளை(நவ.,23) மாலை 5 மணிக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் பத்மநாதன் தலைமையில் நடைபெறும் என தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா அறிவித்துள்ளார். இதில் அக்கட்சி நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, இயற்கை இடர்பாடுகளால் ஏதேனும் மின் குறைபாடு இருந்தால் மின் அவசர புகார்களுக்கு 94987 94987 என்ற எண்ணை பொதுமக்கள் அழைக்கலாம். இவ்வாறு மண்டல தலைமை பொறியாளர் செல்வராஜ் நேற்று(நவ.,21) தெரிவித்துள்ளார்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள டி. ஃபார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக நவ.,20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நவ.30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலராக புதிதாக ராஜேஷ் பொறுப்பேற்றுள்ளார். புதிய அலுவலர் ராஜேஷ் அவரது அலுவலகத்தில் நேற்று(நவ.,21) மாவட்ட அட்யா பட்யா அசோசியேசன் சார்பில் தென்காசி மாவட்ட செயலாளர் வைரமுத்து, பொருளாளர் குத்தால பெருமாள் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து சந்தித்து பேசினர் .
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு வலு தூக்கும் சங்க தலைவருமான வழக்கறிஞர் ராஜா தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட முன்னேற்ற கழக தலைவருமான மு.க ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொதிகை புத்தகத் திருவிழாவில் 15.11.2024 முதல் 19.11.2024 வரை 40,038 பள்ளி மாணவ மாணவியர்களும், 7449 கல்லூரி மாணவ மாணவியர்களும், 74,100 பொதுமக்களும் ஆக மொத்தம் 1,21,584 பேர் கலந்துகொண்டு 28,32,705 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி இருக்கிறார்கள் என்று ஆட்சியர் செய்து குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தென்காசி, விருதுநகர், சிவகங்கை உட்பட 7 மாவட்டங்களில் இன்று(நவ.,21) கன மழைக்கான பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆதலால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. SHARE IT.
கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள தென்காசி தலைமை அஞ்சலகத்தில், வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களுக்கான பார்சல் ஏற்றுமதி மையம் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புபவர்கள் தென்காசி அஞ்சலத்தில் இருந்து அனுப்பி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு வணிக மேலாளர் தொடர்பு எண் 79044 20532. இச்செய்தி குறிப்பை கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் நேற்று(நவ.,20) தெரிவித்துள்ளார்.
தென்காசியில் நடைபெறும் 3வது பொதிகை புத்தகத் திருவிழாவில் இன்று(நவ.,21), சங்கரன்கோவில் வட்டார மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தாமிரபரணி கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகளும், அதை தொடர்ந்து ‘வில்லுப்பாட்டு மாதவி’ குழுவினரின் வில்லிசை இடம்பெறுகிது. இசை கலைஞர் மம்முதுவின் மெல்லிசை நிகழ்ச்சியும், எழுத்தாளர் யுவன் சந்திர சந்திரசேகர், கவிஞர் மதாரும் உரையாற்றுகின்றனர். SHARE IT.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (நவ.20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.