Tenkasi

News December 16, 2024

தென்காசி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் இன்று (டிச.16) இரவு 10 மணி முதல் (டிச.17) காலை 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அழைக்கவும். அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100- ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 16, 2024

ஆழ்வார்குறிச்சியில் பள்ளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து

image

ஆழ்வார்குறிச்சியில் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் செட்டிகுளம், சிவசைலம், சம்பன் குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மாணவர்களை வழக்கம்போல் இன்று காலை பேருந்தில் அழைத்து செல்லப்பட்டனர். பேருந்து ஆனது செட்டிகுளத்தில் தொடர் மழை காரணமாக பள்ளத்தில் சாய்ந்தது. எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதையடுத்து, மாணவர்கள் மாற்று வண்டியில் பள்ளி சென்றனர்.

News December 16, 2024

தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்- கலெக்டர் தகவல்

image

தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று (டிச.16) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அலுவலக வளாகத்தில் வரும் டிச.20 அன்று 10.00am – 02.00pm வரை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் <>-1<<>> என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார். வேலை தேடுவோருக்கு பகீருங்கள்

News December 16, 2024

கடைநல்லூர்: அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம்!

image

திருந்திய நெல் சாகுபடி முறையில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு நாராயண சுவாமி நாயுடு விருது வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு குடியரசு தின விழாவில் ரூ.5 லட்சம் பரிசும், ரூ.7 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பதக்கமும் வழங்கப்படும் என கடையநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் உதயகுமார் நேற்று தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

செகந்திராபாத் – கொல்லம் ரயில் பொங்கல் வரை நீட்டிப்பு!

image

சபரிமலை சீசனை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தை மையமாகக் கொண்டு கடந்த வாரம் ஒரு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது. அதன்படி செகந்திராபாத் – கொல்லம் சிறப்பு ரயிலை பொங்கல் வரை நீட்டிப்பு செய்வதாக ரயில்வே நிர்வாகம் நேற்று(டிசம்பர் 15)அறிவித்துள்ளது. இந்த செய்தி தென்காசி பயணிகளுடைய வரவேற்பு பெற்றுள்ளது.

News December 16, 2024

தென்காசியில் பெய்த மழைக்கு 61 வீடுகள் சேதம்!

image

தென்காசி மாவட்டத்தில் கடந்த 3 நாளாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இந்நிலையில், மாவட்டத்தில் 51 குடிசை வீடுகள் பாதி சேதமாகவும், 10 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சேத விவரங்களை தொகுத்து வருகிறது.

News December 16, 2024

தென்காசி பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்

image

தென்காசி மாவட்டத்தில் கனமழை நின்றதைத் தொடர்ந்து பள்ளிகள் வழக்கம்போல் நாளை(டிச.16) இயங்கும். பள்ளிகளில் மழை நீர் தேங்கியிருந்தாலோ, வேறு பாதிப்புகள் இருந்தாலோ சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவிக்கலாம். மேலும், பள்ளிகளில் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிசெய்த பிறகு மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

தென்காசி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் (டிச.15) இரவு 10 மணி முதல் (டிச.16) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அழைக்கவும். அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ அழைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 15, 2024

கேப்டன் சாதனையாளர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா

image

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் கேப்டன் சாதனையாளர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஆழ்வார்குறிச்சி முன்னாள் வார்டு உறுப்பினர் சண்முகம். இவர் 17 ஆண்டுகளாக ஆழ்வார்குறிச்சி தேமுதிக பேரூர் செயலாளராக உள்ளார். இவருக்கு 2024-25 ஆம் ஆண்டிற்கான தேமுதிக கட்சியினர் விஜயகாந்த் நினைவாக கேப்டன் சாதனையாளர் விருதினை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா வழங்கினார்.

News December 15, 2024

மறுகாலில் இருந்து 15 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

image

தென்காசி, கடையம் அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள புதுக்குளம் மறுகால் பகுதியில் மலை பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக மீனாட்சிபுரத்தை சேர்ந்த சரத் வைகுண்டம், கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி உத்தரவின் பேரில் வேட்டை தடுப்பு காவலர்கள் வேல்ராஜ் குமார், ஊர்பொதுமக்கள் உதவியுடன் 15அடி நீளம் உள்ள மலைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

error: Content is protected !!