India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று (டிச.20)தென்காசி மாவட்ட பகுதியில் நீலகிரி வரையாடு திட்டம்- கோயம்பத்தூர், வாகன விழிப்புணர்வு கலை பயணம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். திட்ட அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ராமநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டி மற்றும் கோடங்கிபட்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் அடிப்படை வசதிகள் கோரிக்கை சம்பந்தமாக கடந்த டிச.5 ஆம் தேதி நம்முடைய WAY2NEWS தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூ.10,25,000 நிதி ஒதுக்கீடு செய்து வேலை பணிகள் நடைபெற்று வருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து அவதூறு கருத்து பேசியதாக நேற்று முதல் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று(டிசம்பர் 20) தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ் புலிகள் அமைப்பு சார்பாக அமித்ஷா படத்தை தீயிட்டு கொளுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் நேற்று(டிச.,19) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்ட விவசாயிகள் கடந்த 12-ஆம் தேதி முதல் 3 நாள் தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட நெல், பருத்தி பயிர்களை கொடுக்கப்பட்ட பரிந்துரைகளை கடைபிடித்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தென்காசியில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் மின்விளக்குகள் இல்லாத ரயில்வே பாலம் அருகே நேற்று(டிச.19) மாலை உடல் ஓன்று கிடப்பதாக தென்காசி போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் ரயில்வே மேட்டு தெரு பகுதியில் வசித்து வரும் சின்னதம்பி என்பவர் என தெரியவந்தது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி எம்.பி டாக்டர்.ராணி ஶ்ரீ குமார் நேற்று, அம்பேத்கரை அவதூறாகப் பேசிய அமித்ஷாவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியினரும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என காங்கிரஸ் மூத்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
“தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதாக இருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தற்பொழுது, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அவசரமாக அங்கு செல்ல வேண்டிய காரணத்தால் தென்காசியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்ற அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கிறது.
தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் டிச.19 இரவு 10 மணி முதல் டிச.20 காலை 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அழைக்கவும். அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100- ஐ அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் இன்று(டிச.19) காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமை வகித்தார், துணை தலைவர் உதய கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்வில், மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பஞ்சாயத்து குழு மூலம் ஊராட்சி பகுதியில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நாளை (டிச.,20) வருகிறார். தொடர்ந்து, அவர் தென்காசியில் பல்வேறு இடங்களை ஆய்வு செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.