India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடையநல்லூர் வேளாண் உதவி இயக்குநர் உதயகுமார் நேற்று(டிசம்பர் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடையநல்லூர் சுற்று வட்டார பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிரில் சாம்பல் நோய் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு கார்பென்டாஸிம் அல்லது நனையும் கந்தகத்தூள் தெளித்து கட்டுப்படுத்தலாம் என்று அதிகாரிகள் அறிவறுஉத்தியுள்ளனர்.
சங்கரன்கோவில் பகுதிக்கு புதிய நூலகத்தை திறந்து வைக்க நேற்று (டிச.22) வருகை தந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தென்காசி திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்திற்கு சென்றார். உடன் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா இருந்தார்.
தென்காசி நகராட்சி ஆணையாளர் நேற்று(டிச.22) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் தென்காசியில் மனிதக் கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் பணியினை மேற்கொள்ளும் நபர்களை கணக்கெடுப்பு செய்யப்பட்டதில் எவரும் கண்டறியப்படவில்லை; இதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் ஜனவரி 6 ஆம் தேதிக்குள் நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இன்று (22.12.2024) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பட்டியலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் தொலைப்பேசி எண் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 04633-295455, 9884042100-ஐ தொடர்பு கொள்ளலாம் என தென்காசி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் செய்தி குறிப்ப வெளியிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், சிவகிரி, சங்கரன்கோவில் ஆகிய நீதிமன்றங்களில் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பெருந்தகை நாடாளுமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளை 13 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் 3 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி பொறுப்பு மண்டல தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 வது மண்டல ஒருங்கிணைப்பாளராக முன்னாள் எம்.பி எஸ்எஸ் ராமசுப்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி ஆய்க்குடி சாலையில் கடந்த 19ஆம் தேதி ரயில்வே பாலத்திற்கு கீழ் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். தென்காசி போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அவர் தென்காசி பகுதியைச் சார்ந்த சின்னத்தம்பி என்பதும், அவரை கொலை செய்தது அவரது நண்பர் லெப்ட் சாகுல் ஹமீது மற்றும் அவரது சகோதரர் முகமது ஆகியோர் என்பதும் தெரிய வந்ததை தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் இன்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,“குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தினை நாளை (டிச.23) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். இதையடுத்து, குருவிகுளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொள்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் விண்ணப்பித்துள்ள பயனாளிகளுக்கு இலவச வீடு கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தென்காசி கலெக்டர் கமல் கிஷோரிடம், தெற்கு மாவட்ட திமூக பொறுப்பாளர் ஜெயபாலன் நேற்று(டிச.21) மனு வழங்கியுள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.
தென்காசி, ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தபிள்ளையூரை சேர்ந்தவர் அருள். இவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவியின் மகன் சொக்கன் என்ற இருதயராஜ்(47). இளைய மனைவியின் மகன்கள் ஆரோக்கியராஜ், ஜெயபால். (டிச.20)அச்சங்குளம் குளக்கரைக்கு சென்ற ஆரோக்கியராஜ், ஜெயபால் இருதயராஜிடம் சொத்து தொடர்பாக தகராறு செய்ததில், அண்ணனை தலையை துண்டித்து கொலை செய்தது தெரியவந்தது. ஆழ்வார்குறிச்சி போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.