Tenkasi

News December 24, 2024

தென்காசி மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

image

தென்காசி மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர். எனவே விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News December 24, 2024

தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மாவட்டத்தில் தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறுகிய கால பயிற்சிகள் அரசு தொழில் பயிற்சி நிலையம் தனியார் தொழில் பயிற்சி நிலையம் மூலம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://candidate.tnskilltn.gov.in/skilleallet/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்றார்.

News December 24, 2024

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு பாராட்டு

image

சிறப்பாக பணியாற்றிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தென்காசி உட்கோட்ட பகுதியில் பணியாற்றிய நாகசுப்பிரமணியன், உணவு பாதுகாப்பு துறையில் அதிரடி நடவடிக்கை மூலம் உணவு பாதுகாப்புத் துறையை திரும்பிப் பார்க்க வைத்தவர். இதை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பாராட்டு சான்றிதழும் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

News December 24, 2024

தென்காசி அருகே கொடூர கொலை! 2 பேர் கைது

image

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே இருதயராஜ்(45) என்பவர் கடந்த 20 ஆம் தேதி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த இருதயராஜின் தம்பி முறையான ஜெயபால்(40), பாஸ்கர்(37) ஆகியோரை போலீசார் நேற்று(டிசம்பர் 23) கைது செய்தனர். தலை துண்டித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

News December 24, 2024

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை சந்தித்த ஜெயபாலன்

image

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் நேற்று(டிச.23) தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தனை சந்தித்து பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார். இதில் ஆதிதிராவிடர் நல விடுதியில் புதிய வகுப்பறைகள், குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை விரைந்து செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

News December 23, 2024

தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் காவல் மற்றும் நெடுஞ்சாலை துறை ரோந்து பணியில் இன்று (டிச.23) இரவு 10 மணி முதல் (டிச.24) காலை 6 மணி வரை பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரம் மாநகர காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 – ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 23, 2024

அமித்ஷாவை கண்டித்து காங்கிரஸ் கமிட்டி சார்பாக பேரணி

image

அண்ணல் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அவதூறு பேசியதை கண்டித்தும், மன்னிப்பு கேட்டு வலியுறுத்தியும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் நாளை காலை 9 மணிக்கு நன்னகரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பேரணி நடைபெறுகிறது. இதில், அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

News December 23, 2024

தென்காசி காவலர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு

image

தென்காசி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் காவலர்களில் 3 ஆண்டுகளை நிறைவு செய்து வேறு காவல் நிலையத்திற்கு பணியிட மாறுதல் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு, எஸ்பி ஸ்ரீனிவாசன் தலைமையில் இன்று (டிச.24) நேரடி கலந்தாய்வு நடந்தது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் 71 காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர். காவல் ஆளினர்கள் விருப்பம் தெரிவித்த காவல் நிலையங்களில் அவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

News December 23, 2024

கடையம் வேட்டை தடுப்பு காவலர் தற்கொலை

image

கடையம் வனச்சரக அலுவலகத்தில் வேட்டை தடுப்பு காவலராக களக்காடு பகுதியை சேர்ந்த சுதாகர்(32) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு, இவரது மனைவி நந்தினிக்கும் நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை வந்துள்ளது. இதில் மனமுடைந்த சுதாகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் இன்று(டிச.23) வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர் .

News December 23, 2024

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு கண்காட்சி

image

தென்காசி மாவட்டம், பொதுநூலகத்துறை, மாவட்ட மைய நூலகம், சார்பில் கன்னியாகுமரி திருவள்ளுவர் உருவச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்ஏ. கே. கமல்கிஷோர் தலைமையில் வெள்ளிவிழா நடந்தது. அதனை தொடர்ந்து புத்தக கண்காட்சி நடந்தது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!