India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவில்பட்டி அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இன்று(டிசம்பர் 26) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை பக்தர்களின் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கும் வசதியை இந்திய அஞ்சல் துறை வழங்குகிறது. இதைப் பெற, சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களை அணுகி அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயன்பெறலாம் என்றுள்ளார்.
உலகம் முழுவதும் நேற்று(டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதலே கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், தென்காசி வடக்கு மாவட்டம் திமுக செயலாளரும் சங்கரன்கோவில் MLA-வுமான ராஜா, குருவிகுளம் புனித சூசையப்பர் தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டு கூறுகையில், தொகுதியில் உள்ள 218 தேவாலயங்களில் 80 ஆயிரம் கேக்குகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்தில் காவல் மற்றும் நெடுஞ்சாலை துறை ரோந்து பணியில் இன்று (டிச.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரம் மாநகர காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 – ஐ தொடர்பு கொள்ளவும்.
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோயில் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வருகிற ஏப்ரல் 7-ம் தேதி கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக இன்று(டிச.25) கோவில் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் சுரண்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் 100வது பிறந்த தின விழாவை முன்னிட்டு, நகர தலைவர் அருணாசலம் தலைமையில் சுரண்டை பேருந்து நிலையம் முன்பு கொடியேற்றி அவருடைய படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 2 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தனர்.
தென்காசி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா இன்று(டிசம்பர் 25) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் சம்பந்தமாக அதனை கண்டித்து தென்காசியில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கீழக்கடையம் ரயில் நிலையம் முன்புள்ள தண்டவாளத்தில், சுமார் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் ரயில் மோதி தலை தனியே உடம்பு தனியே கிடப்பதாக தென்காசி ரயில்வே போலீசாருக்கு நேற்று இரவு(டிச.24) தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் காவல் மற்றும் நெடுஞ்சாலை துறை ரோந்து பணியில் இன்று (டிச.24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரம் மாநகர காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 – ஐ தொடர்பு கொள்ளவும்.
தென்காசி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொண்டாட்டங்களின் போது இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் பைக் ரேஸ் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து அவர்களின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என எஸ்பி எச்சரிக்கை.
தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தென்காசி எம்பி ராணி ஶ்ரீ குமார் பொங்கல் மற்றும் குடியரசு விடுமுறை நாட்களில் திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக தாம்பரத்திற்கும் மற்றும் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி, தென்காசி வழியாக மங்களூருக்கு சிறப்பு இரயில்கள் இயக்க வேண்டும் என்று தென்னக ரயில்வேக்கு இன்று (டிச.24) கோரிக்கை வைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.