India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசியில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான விவகாரம் விபத்து என கூறப்பட்ட நிலையில் தற்கொலை முயற்சி என போலீசார் விசாரணையில் அம்பலமானது. நேற்று சக்தி நகரில் சிலிண்டர் வெடித்துவிபத்து என கூறப்பட்ட நிலையில் தற்கொலை முயற்சி என போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர். குழந்தைகளை கொலை செய்ய முயற்சித்ததாக தாய் ஜூலி மீது தென்காசி காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று(ஜன.27) மக்கள் குறைத்தீர் நாள் கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் பெற்றுக் கொண்டார். மொத்தம் 626 மனுக்கள் பெறப்பட்டு, தகுதி வாய்ந்த மனுவாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் பரிந்துரை செய்தார்.*உங்கள் மனுவிற்கு தீர்வு கிடைத்துள்ளதா?
தென்காசி, சாம்பவர் வடகரை வடக்கு அம்மன் கோயில் தெருவை சேர்ந்த கோட்டைசாமி-ராமலெட்சுமி தம்பதியின் மகள் ஹெபினா, துரைச்சாமிபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கிறார். இவர், இந்திய அரசியலமைப்பு தினத்தை(ஜன.26) முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் 3ஆம் இடம் பிடித்ததை தொடர்ந்து, நேற்று(ஜன.26) ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பரிசு பெற்றார்.
மாநில அளவில் சிறந்த சேவை புரிந்த மருத்துவர்களுக்கான விருதுகள் சென்னையில் மருத்துவப் பணிகள் இயக்குனர் தலைமையில் நேற்று(ஜன.26) நடைபெற்றது. இதில் தென்காசியைச் சேர்ந்த குழந்தைகள் நல பிரிவு தலைமை அரசு மருத்துவர் கீதா, எலும்பு முறிவு மருத்துவர் மது, அறுவை சிகிச்சை மருத்துவர் விக்னேஷ் சங்கர் ஆகியோர் சிறந்த மருத்துவர்களுக்கான விருதை பெற்று தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் 33 மாவட்ட புதிய தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், தென்காசி மாவட்டத்திற்கு கடையநல்லூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் அய்யாசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், நேற்று(ஜன.26) சென்னை கமலாலயத்தில் சரத்குமாரை நேரில் சந்தித்து ஆனந்தன் அய்யாசாமி வாழ்த்து பெற்றார்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஜன.26) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையாகும். மருத்துவமனை முழுவதும் சுகாதாரமான முறையில் தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில் பொதுமக்கள் ஒத்துழைப்போடு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தலைமை மருத்துவருக்கு மாநில அளவில் சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக அளவில் மாநிலத்தில் சிறந்த மருத்துவருக்கான விருது சென்னையில் மருத்துவ பணிகள் இயக்குனர் தலைமையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் செங்கோட்டை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் விருது பெற்ற பின் ராஜேஷ் கண்ணன் முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நாட்டின் 76வது குடியரசு தின விழா கொண்டாட்டம் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உற்சாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினார். விழாவில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேங்கை வயல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க கோரி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தலின்பேரில் தென்காசி தெற்கு மாவட்ட விசிகவினர் ஜனவரி 31ஆம் தேதி மாலை 3 மணிக்கு தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ளும் படி மாவட்ட செயலாளர் பண்பொழி செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.