Tenkasi

News February 18, 2025

தென்காசி இரவு காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விபரம்

image

இன்று 17.02.2025 தென்காசி மாவட்ட உட்கோட்ட பிரிவுகளில் (தென்காசி புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம்) காவல் மற்றும் நெடுஞ்சாலை துறையின் இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம்.

News February 17, 2025

தமிழ்நாடு பசுமை சார்பு விருது விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சார்பின் விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் WWW.tnpcb.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் இன்று செய்தி வெளியிட்டுள்ளார்

News February 17, 2025

வீடுகள் முன்பு கருப்பு கொடி கட்டி மக்கள் போராட்டம்

image

தென்காசி அருகே கோவில் நிலத்தில் குடியிருந்து வரும் பொதுமக்கள் ரூ.16 கோடி வரிப்பாக்கியை கட்டக்கோரி இந்து சமய அறநிலயத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகார் குறித்து எந்த வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் தற்போது அப்போது மக்கள் வீடுகளின் முன்பு கருப்பு கொடியை கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News February 17, 2025

காசி விசுவநாதர் கோவிலில் கொடிமரங்கள் பிரதிஷ்டை

image

இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 2 கொடிமரங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு கொடிமரம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக இன்று(17ஆம் தேதி) காலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

News February 17, 2025

தகுதி உள்ளவர்களுக்குதான் திமுகவில் பதவி: அமைச்சர் KKSSR

image

தென்காசி மாவட்டத்திற்கு நேற்று(பிப்.16) வருகை தந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கு திமுகவில் அமைச்சர் பதவி என்று அண்ணாமலை கூறுவது தவறு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இறந்தபோது அங்கு தலைமை சரியில்லை என்று கருதிய பலர் திமுகவிற்கு வந்தனர். அதில் நானும் ஒருவன். தகுதி உள்ளவர்களுக்குதான் இங்கு பதவி வழங்கப்படுகிறது என்றார்.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்!

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில்(BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லர், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்.

News February 16, 2025

தென்காசியில் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று பிப். 16 இரவு தென்காசி, , புளியங்குடி, சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News February 16, 2025

 மறியலில்1000 ஆசிரியர் பங்கேற்க முடிவு

image

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்ட சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் சுதர்சன் தலைமையில் பால மார்த்தாண்டபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் வைத்து 16.02.25 முற்பகலில் நடைபெற்றது. பிப்ரவரி 25 அன்று ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் மாவட்ட தலைநகர் அளவிலான மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 1000ஆசிரியர்கள் பங்கெடுக்க முடிவு செய்யப்பட்டது.

News February 16, 2025

பட்டியலின மாணவியை காலில் விழ வைத்த கொடூரம்

image

கோவில்பட்டி DHYAN HEALTH EDUCATION என்ற நிறுவனத்தில் தென்காசி, நாயினாம்பட்டியை சேர்ந்த மாலா வினோதினி(பட்டியலினம்) படித்து வருகிறார். இவருக்கு சக மாணவியுடன் ஏற்பட்ட தகராறில், கல்வி நிறுவன கண்காணிப்பாளர் கிருஷ்ணாபிரியா, மாலா வினோதினியை சக மாணவியின் காலில் விழ வைத்து, அடித்து துன்புறுத்தியுள்ளார். இது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் கிருஷ்ணாபிரியா மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குபதிந்துள்ளனர்.

News February 16, 2025

தந்தை கொலையில் 12 வயது மகனும் கைது

image

தென்காசி மாவட்டம் நொச்சிகுளத்தை சேர்ந்த முத்துக்குமார் கடந்த 5ம் தேதி மஞ்சள் காமாலை நோயால் இறந்ததாக மனைவி கூறினார். இந்த நிலையில் முத்துக்குமாரின் பிரேத பரிசோதனையில் கழுத்து நெறித்து கொல்லப்பட்டதாக அறிக்கை வந்தது. அவரது மனைவி மரியா ஆரோக்கிய செல்விடம் விசாரித்த போது கணவனை கழுத்து நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த நிலையில் நேற்று 12 வயது அவரதுமகனையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!