Tenkasi

News February 22, 2025

ஆட்சியர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம்

image

தென்காசி, சாம்பவர் வடகரை பகுதியில் ஊர் நிர்வாகம் 8 குடும்பங்களுக்கு பல லட்ச ரூபாய் அபதாரம் விதித்துள்ளனர். அபராதம் கட்ட தவறியதால் 8 குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்டனர். அதை எதிர்த்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 50 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியிருப்பு போராட்டம் நடத்தியதால் அனைவரும் கைது செய்யப்பட்டு தாய்ப்பாலா திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

News February 22, 2025

தென்னிந்தியாவின் முதல் உலக அமைதி கோபுரம்!

image

சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பில் உலக அமைதி கோபுர திறப்பு விழா நேற்று(பிப்.21) நடந்தது. ஜப்பான் நாட்டின் நிப்போன்சான் மியோஹோஜி என்ற புத்த சமயம் சார்பாக கட்டப்பட்டுள்ள இந்த உலக அமைதி கோபுரம் தென்னிந்தியாவில் உள்ள முதல் உலக அமைதி கோபுரம் ஆகும். நிகழ்ச்சியில், காந்தியவாதி முத்தையா குடும்பத்தினர் முன்னிலையில் மாஸ்கோ காந்தி பவுண்டேஷன் புத்த சொசைட்டி வெஸ்ட் மினிஸ்டர் ஆங்கிலிகேன் அருளுரையாற்றினார்.

News February 22, 2025

தென்காசி மாவட்ட அணைகளின் நிலவரம்

image

தென்காசி மாவட்டத்தில், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 49 அடியாக உள்ளது. கடையம் அருகே உள்ள 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 46 அடியாக உள்ளது.132 அடி கொள்ளளவு கொண்ட அடவி நயினார் அணை நீர்மட்டம் 52.25 அடியாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது .

News February 22, 2025

தென்காசியில் ‘SELFIE WITH DAUGHTER’ போட்டி!

image

தென்காசி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு ‘SELFIE WITH DAUGHTER’ போட்டி நடைபெற உள்ளது. பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடைபெறும் இப்போட்டியில் மார்ச் 1லிருந்து 6ஆம் தேதி வரை முழு விவரத்துடன், ‘தாய்-மகள்’ சுய படம் எடுத்து bbbptenkasi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. SHARE IT.

News February 22, 2025

திருவள்ளுவர் ஓவியத்தின் உலக சாதனை நிகழ்ச்சி!

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் அமைந்துள்ள கோமதி அம்மாள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 30.3.2025 அன்று காலை 10:30 மணி முதல் நதிகள் அறக்கட்டளை சார்பில், திருவள்ளுவர் ஓவியத்தின் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் ரூ.20 கட்டணம் செலுத்தி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் தகவல். SHARE IT.

News February 21, 2025

தென்காசி மாவட்ட ரோந்து அதிகாரிகள் பணி விபரம்

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (பிப்-21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தென்காசி ,புளியங்குடி , ஆலங்குளம், சங்கரன்கோவில் உட்கோட்டம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவல்துறை ஆய்வாளர்கள் பட்டியலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்கள் அவசர உதவிக்கு அதில் குறிப்பிட்டுள்ள எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 21, 2025

16 கிலோ கஞ்சா பறிமுதல் தென்காசியை சேர்ந்தவர்கள் கைது

image

திருநெல்வேலி திருவனந்தபுரம் தேசிய நான்கு வழி நெடுஞ்சாலையில், வாகன சோதனையின் போது பாளையங்கோட்டை போலீசார் 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். விற்பனைக்காக கொண்டு சென்ற திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் கைது. பாளையங்கோட்டை ஆய்வாளர் தில்லை நாகராஜன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர் .

News February 21, 2025

கல்லூரணி: புகையிலை பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு சீல்

image

சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள குருசாமி என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடை மற்றும் மேல பட்டா குறிச்சி கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பெட்டி கடையிலும் சோதனை நடத்தியதில் புகையிலை பிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உணவு கட்டுப்பாடு துறை மூலம் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் குருசாமி மற்றும் கிருஷ்ணன் ஆகியோருக்கு இரண்டாவது முறை என்பதால் தலா ரூ-50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

News February 21, 2025

தென்காசி பகுதியில் ராணி ஸ்ரீ குமார் எம்பி நன்றி அறிவிப்பு

image

தென்காசி எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்காசி மேற்கு ஒன்றிய பகுதிகளான வல்லம், பண்பொழி உள்ளிட்ட இடங்களில் நேற்று(பிப்.26) வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்தார். அப்போது தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி, யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா மற்றும் திமுகநிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News February 21, 2025

காசியில் மாயமான பெண்கள் தென்காசி திரும்பினர்!

image

தென்காசியில் இருந்து காசிக்கு புனிதயாத்திரை சென்றவர்களில் கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமி, கஸ்தூரி ஆகிய 2 பெண்கள் பிப்.18ஆம் தேதி திடீரென மாயமாகினர். இதை தொடர்ந்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. அங்குள்ள போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் இன்று(பிப்.21) காலை தென்காசி வீட்டிற்கு வந்ததாக கூறப்படும் நிலையில், உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!