Tenkasi

News February 28, 2025

தென்காசி மாவட்டத்தில் மின் தடை கிடையாது!

image

தென்காசி, சாம்பவர் வடகரை, சுரண்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் நாளை(மார்ச் 1) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக வாட்ஸ்-அப் குழுக்கள் வாயிலாக தவறான தகவல் பரவி வருகிறது. இதனை நம்ப வேண்டாம். பள்ளி தேர்வுகள் முடியும் வரை மின்தடை இருக்காது என நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார். SHARE IT.

News February 28, 2025

தென்காசியில் கனமழை பெய்ய வாய்ப்பு!

image

காற்று சுழற்ச்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(பிப்.28) தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உட்பட பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளையும் இந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். இதனால் இந்த பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News February 28, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தினந்தோறும் இரவு நேர ரோந்து பணிக்கான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். மேலும் (27.2.25) புளியங்குடி , தென்காசி , சங்கரன்கோவில் ஆலங்குளம் போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் குறைகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். அல்லது 100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

News February 27, 2025

தென்காசியில் பிறந்து விஜய்க்கு மெகா ஹிட் கொடுத்த இயக்குநர்

image

தமிழ்சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் விக்ரமன். மார்ச்சு 30, 1964 -ல் பிறந்த இவர் புதுவசந்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். குடும்பம் சார்ந்த கதைகளில் அதிகமாக எமோசனல் விசயங்களை தூவி இவரது ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை அழ வைத்தார். விஜயுடன் இவர் இணைந்த பூவே உனக்காக மெகா ஹிட். இவர் பிறந்தது நம்ம தென்காசி மாவட்டம் தான்.*நண்பர்களுக்கும் பகிரவும்

News February 27, 2025

சங்கரன்கோவில்: 10 நாட்களில் ரூ.45 ஆயிரம் வருமானம் 

image

வட்டார வணிக வள மையம் மூலம் கடன் உதவி பெற்று சங்கரன்கோவில் மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பினாயில் சோப் ஆயில் செய்து வந்துள்ளனர். ரூ.3 லட்சம் வரை கடன் உதவி பெற்று தொழிலை விரிவு படுத்திய நிலையில், வட்டார வணிக வள மையம் ஊக்கப்படுத்தியதன் காரணமாக தற்போது நல்ல வருமானம் ஈட்டுவதாகவும், கடந்த புத்தக திருவிழாவில் 10 நாட்களில் ரூபாய் 45 ஆயிரம் வருமானம் ஈட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.

News February 27, 2025

தென்காசி தனித் துணை கலெக்டர் மாற்றம்

image

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வருவாய்த்துறையில் தாசில்தாராக பணியாற்றி வரும் 40 பேருக்கு துணை கலெக்டராக பதவி உயர்வு அளித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவு பிறப்பித்து, இடமாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை கலெக்டர் ஷேக் அயூப் தூத்துக்குடி டாஸ்மாக் மாவட்ட மேலாளராக நேற்று இடமாற்றப்பட்டுள்ளார்.

News February 27, 2025

தங்கப்பதக்கம் பெற்ற சுரண்டை வீரருக்கு துணை CM பாராட்டு

image

38வது தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி உத்தரகாண்டில் நடைபெற்றது. போட்டியில் தமிழ்நாடு டென்னிஸ் அணி சார்பாக சுரண்டையை சேர்ந்த தீரஜ் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்றார். அவருக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.3 லட்சத்திற்கான காசோலை வழங்கி பாராட்டினார். மேலும் பல்வேறு பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டு அணிக்கு பெருமை சேர்க்க தென்காசி தெற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பாக வாழ்த்துகள் தெரிவித்தார்

News February 27, 2025

தென்காசி அருகே பிரபர யூடியூபர் சூட்டிங்!

image

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் கருத்தானூர் கிராமம், கரையடி அய்யனார் கோவில் மைதானத்தில் பிரபல யூடியூபரும், டிராகன் திரைப்பட நடிகருமான வி.ஜே. சித்து மேற்பார்வையில் சூட்டிங் நடைபெற்றது. கருத்தானூர் ஜேகேஎஸ் சிலம்பம் குழு சார்பில் அதன் இயக்குநர் ஜெகதீஷ் ஏற்பாட்டில் சிலம்பம் சூட்டிங் நடத்தப்பட்டதாக தகவல். நிகழ்வில் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News February 26, 2025

எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் இன்று சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து முடிக்க ஆலோசனை செய்யப்பட்டது.

News February 26, 2025

காசி விஸ்வநாதர் கோயிலில் மகா சிவராத்திரி பணிகள் மும்பரம்

image

தென்காசி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும் பிரசித்தி பெற்றதுமான காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி பணிகள் மும்பரம். இன்று இரவு நடைபெற உள்ள நிலையில் சுவாமி அம்பாளுக்கு 16 வகை நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம், நான்கு கால பூஜைகள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்கும் பரதநாட்டிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!