India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி நகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுகவைச் சேர்ந்த துணைத் தலைவர் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சியில் தன்னுடைய அனுமதியின்றி 40 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு சுமார் 50க்கும் மேற்பட்ட இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி துணை தலைவர் சுப்பையா சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நிர்வாக இயக்குநரிடம் நேற்று மனு அளித்துள்ளார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று (செப்.19) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் காலியாக உள்ள கோவில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் ஆளினர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள செல்லப் பிள்ளையார் குளம் பகுதியை சேர்ந்த உச்சிமாகாளி என்பவர் கடன் தொல்லையால் விஷம் குடித்து தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துள்ளார். இதில் கடை குட்டி மகனான பிரவீன் ராஜ்(2) மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தென்காசி புதிய பஸ் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து பழைய பேருந்து நிலையம் உள்ளே செல்லும் நுழைவு வாயில் முன்பு வேகமாக வந்து திரும்பியதை கவனிக்காமல் யானைபாலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் பேருந்தின் முன் பக்கத்தில் மோதினார். இதில் முதியவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தென்காசி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில், காலியாக உள்ள கோவில் பாதுகாப்பு பணிக்கு முதற்கட்டமாக 11 முன்னாள் ராணுவப்படை வீரர்கள் / ஓய்வு பெற்ற காவல்துறை ஆளினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் கலந்துகொண்டு பணி நியமன ஆணை வழங்கினார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட எஸ்பி ஶ்ரீனிவாசன் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்டத்தில் இயங்கி வரும் காவல் வாகனங்களை எஸ்பி ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
புல்லுக்காட்டு வலசையில் 2016ஆம் ஆண்டு புளிச்சிகுளத்தை சேர்ந்த ஆனந்த் (41) என்பவரை கொலை செய்த வழக்கில் முத்துமாலைபுரம் அசோகன்(40) என்பவரை அப்போதைய குற்றாலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ் குமார் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள 85 அடி முழு கொள்ளளவு கொண்ட கடனாநதி அணைக்கு நீர்வரத்து ஆனது இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7 கனஅடியாக சரிந்துள்ளது. ராமநதிக்கு 23 கன அடி ஆகவும், கருப்பா நதிக்கு 5 கன அடியாகவும், குண்டார் அணைக்கு 38 கன அடி ஆகவும் அடவிநயினார் கோவில் அணைக்கு 17 கன அடியாகவும் நீர்வரத்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். இதில் சீட் பெல்ட் அணியாமல் விபத்துக்கள் ஏற்பட்டு நிறைய பகுதிகளில் உயிரிழப்புகள் நீடிக்கின்றன. இதில் பின்னால் உள்ளவர்களும் குழந்தைகளும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டிய அவசியம் குறித்து அறிக்கை வெளியிட்டனர்.
செங்கோட்டை – ஈரோடு இடையே இயக்கப்படும் ரயில் திண்டுக்கல் அருகே ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் 23ம் தேதி வரையும் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரையும் அக்டோபர் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரையும் ஈரோடு திண்டுக்கல் இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் தென்காசி, அம்பை வழியாக செல்வதால் அப்பகுதி பயணிகள் ரயில்வே அறிவிப்புக்கு ஏற்க அமைத்து கொள்ளுமாறு கோட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.