India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கான மாவட்ட அளவிலான வள பயிற்றுநருக்கான இடம் தேர்வு செய்வதற்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 5 வருட பணி செய்த அனுபவம், தனி நபர் தொடர்பு ஆகியவற்றில் திறமை உள்ளவராக இருத்தல் வேண்டும்.dpiu tsi@vahoo.com என்ற மெயில் மூலமாகவும் 18.03.2025 ஆம் தேதி பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏந்தலூர் கிராமத்தில் நடுத்தெருவில் வசிக்கும் சந்திரன் மகன் செல்வம் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டு நாள்களுக்கு முன்பு ஒன்றாம் வகுப்பு படிக்கும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடையநல்லூர் அருகே உள்ள வலசையை சேர்ந்த செல்வம் (20) என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து செல்வம் அவரது உறவினர்கள் காளியம்மாள் (40), முருகன் (39 )முருகன் மனைவி முத்துலட்சுமி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர் .
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று (மார்ச்-8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆயக்குடி பகுதியில் பால சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இந்த கோயிலில் மனதார வேண்டினால் அந்த பாலமுருகனே பாலகனாக வந்து பிறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மூலவர் பாலசுப்பிரமணியர் இடதுபுறம் திரும்பிய மயில் வாகனத்தின் மீது குழந்தை வடிவில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இங்கு வைகாசி விசாகம்,தைப்பூசம் மிகவும் சிறப்பாக நடை பெரும். SHARE பண்ணுங்க
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மெயின் ரோட்டில் உள்ள மீரான் ஸ்பேர்பார்ட்ஸ் அருகில் இன்று மதியம் அவ்வழியே ஆம்னி கார் மற்றும் இரு சக்கரவாகனம் மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே அழகப்பபுரத்தில் கமல் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரீட்டா பகரி (35) என்ற பெண் வேலை பார்த்து வந்துள்ளார் .இந்த நிலையில் நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்தனர். இந்நிலையில் தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் <
தென்காசியில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும் *ஷேர் செய்து உதவினால் பயனுள்ளதாக இருக்கும்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி 2025 -2026 ஆம் நிதியாண்டிற்கான தெரு மின் விளக்கு, சுகாதார வளாகம், குடிநீர் சாமான்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏலமானது வருகிற 25-ம் தேதி செயல் அலுவலர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் நடத்தப்படும் விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என செயல் அலுவலர் கேட்டுக்கொண்டார். *ஷேர்
Sorry, no posts matched your criteria.