India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் இரவணசமுத்திரத்தை சேர்ந்தவர் பரத்வாஜ். முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். தமிழில் காதல் மன்னன், ஜேஜே ,ஜெமினி, அட்டகாசம் என பல படங்களுக்கும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் இசையமைத்துள்ளார். 2008-ம் ஆண்டில் கலைமாமணி விருது, 2 முறை பிலிம்பேர் விருதும் பெற்றுள்ளார். அஜித்க்கு காதல் மன்னன் பெயரை பெற்று தந்த படத்திருக்கும் இசை அமைத்தவரும் இவரே. *ஷேர் செய்யவும்*
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், ஹோட்டல் தமிழ்நாடு குற்றாலம் கிளைக்கு காய்கறி, கோழிக்கறி, முட்டை, பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள் மீது ஒப்பந்த புள்ளிகள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் அலுவலகத்தில் படிவம் பெற்று வரும் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
தென்காசி மாவட்டம் சுரண்டை தொழிலதிபர் எஸ்வி கணேசன் ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் புளியங்குடியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் என் அனுமதியின்றி எனது பெயரை தவறாக (Missuse) பாஜகவினர் விளம்பர நோட்டீஸில் போட்டுள்ளார்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. உடன்பாடு இல்லாத இயக்கத்தின் நோட்டீஸ்ஸில் என் அனுமதி இன்றி எனது பெயரை போட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பாவூர்சத்திரத்தில் வென்னி மலை முருகன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு பால்குடம், அழகுகுத்தி ஊர்வலம் என பக்தர்கள் அதிக அளவில் வருவதைத் தொடர்ந்து பாவூர்சத்திரம் ரயில்வே கேட் அருகே கார், ஆட்டோ செல்ல முடியாத வகையில் காவல்துறை மூலம் தடுப்பு அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. மற்ற வாகனங்கள் அனைத்தும் செல்வ விநாயகர்புரம் பகுதி வழியாக விடப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள ஊரணி குளம் மற்றும் கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை, விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மண் பெற்றுக்கொள்ள tnesevel.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். SHARE IT.
தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்ற நிலையில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று தென்காசி சுற்றுவட்டார பகுதிகளான சிவகிரி, சங்கரன்கோவில், செங்கோட்டை, ஆய்க்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. இதில் அதிகப்படியாக தென்காசி பகுதியில் 17 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறைந்த பதிவாக சிவகிரியில் 1 மில்லி மீட்டர் மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று(மார்ச் 12) தென், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தென்காசி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று (மார்ச்-11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது, இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரை தென்காசி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் துணை ஆணையர் கோமதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் சுவாமி கோவிலில் மடப்பள்ளி மற்றும் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கோவில் அலுவலகத்தில் இன்று(மார்ச் 11) முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். SHARE IT.
Sorry, no posts matched your criteria.