India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ்க்கு ஆட்கள் தேர்வு முகாம் நாளை (செப். 7) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதில், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும், ; மேலும் விவரங்களுக்கு 7397724825, 7397724853 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டினம் அழகாபுரியை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (25)இவர் வீட்டில் கலர் பிரிண்டிங் இயந்திரத்தில் வைத்து கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் ஆலங்குளம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று அங்கு சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சங்கரன்கோவில் காவல் உட்கோட்ட எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத 89 இருசக்கர மோட்டார் வாகனங்கள், 01 நான்கு சக்கர மோட்டார் வாகனம் என மொத்தம் 90 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் 18.09.2025 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பனவடலிசத்திரம் காவல் நிலைய வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் பங்கேற்கலாம். *ஷேர் பண்ணுங்க
தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் கோவிலில் இருந்த விலை உயர்ந்த வெள்ளி விளக்குகள், பித்தளை விளக்குகள் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கோவில் நிர்வாக அதிகாரி அவரை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார். இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மக்களே, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: <
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க.. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!
தென்காசி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே நேற்று மலையான் குளத்தில் திருமண வீட்டில் உணவு பரிமாறுபதில் ஏற்பட்ட தகராறில் ராமச்சந்திரன்(40) தள்ளப்பட்டு உயிரிழந்தார். உறவினர் வீட்டு விழாவில் ஏற்பட்ட மோதலில் நெஞ்சு பிடித்து மயங்கிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தென்காசி மாவட்டம், கடையம் அருகே மலையான் குளத்தில் திருமண வீட்டில் உணவு பரிமாறுபதில் ஏற்பட்ட தகராறில் ராமச்சந்திரன்(40) தள்ளப்பட்டு உயிரிழந்தார். உறவினர் வீட்டு விழாவில் ஏற்பட்ட மோதலில் நெஞ்சு பிடித்து மயங்கிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை (செப்.6) சனிக்கிழமை புளியங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படுகிறது.தி.நா.புதுக்குடி, திருவேட்டநல்லூர், வீரசிகாமணி,அரியலூர், சிங்கிலிபட்டி, சொக்கம்பட்டி, சிந்தாமணி, சுப்பிரமணியாபுரம், பாம்புக்கோவில், சந்தை நகரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அடுத்துள்ள மேக்கரை பகுதி வழியாக அச்சன்கோவில் செல்லும் வனப்பகுதியில் அமைந்துள்ள கும்பாவூருட்டி அருவியில் ஓணம் பண்டிகை முன்னிட்டு நாளை சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விரிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலிருந்தும் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.