Tenkasi

News August 1, 2024

தென்காசி உழவர் சந்தை நிலவரம்

image

தென்காசி உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய(ஆக.,1) விலை நிலவரம்(ஒரு கிலோ): கத்தரிக்காய் ரூ.60, தக்காளி ரூ.40, வெண்டைக்காய் ரூ.50, புடலைங்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, பாகக்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.15, தடியங்காய் ரூ.25, பூசணிக்காய் ரூ.18, அவரைக்காய் ரூ.120, மிளகாய் ரூ.60, முள்ளங்கி ரூ.50, முருங்கைக்காய் ரூ.80, சின்ன வெங்காயம் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.50, இஞ்சி ரூ.160, மாங்காய் ரூ.60.

News August 1, 2024

ஐந்தருவி சாலையில் திடீரென வந்த யானையால் பரபரப்பு

image

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி தனியார் ரிசார்ட் பகுதியில் நேற்று(ஜூலை 31) இரவு திடீரென யானை வந்தது. தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு பட்டாசு வெடிக்கச்செய்து யானையை வனத்திற்குள் விரட்டியுள்ளனர். யானை வனப்பகுதிக்குள் செல்லும் காரணத்தால் தற்போது அப்பகுதியில் வாகனங்களுக்கு வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News July 31, 2024

பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வருகை

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நாளை வருகை தர உள்ளதாக தென்காசி மாவட்ட தலைவர் கே ஏ ராஜேஷ் ராஜா கூறியுள்ளார். அதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News July 31, 2024

எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தென்காசி எஸ்பி சுரேஷ்குமார் தலைமை வகித்து பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்

News July 31, 2024

இராமாநதி அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

image

டையம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் 84 அடி கொள்ளளவு கொண்ட இராமாநதி அணை அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் அணைக்கு 109 கன அடி நீர்வரத்து இருக்கும் நிலையில் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையில் இருந்து 87 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை கருதி அணைப்பகுதிக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தடை விதித்துள்ளார்.

News July 31, 2024

தென்காசிக்கு வருகை தரும் அமைச்சர்

image

தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டப்பட்டு அதனை நாளை முதல்வர் காணொளி காட்சி மூலம் சென்னையிலிருந்து திறந்து வைக்கிறார். இதில் சிறப்பு அழைப்பாளராக பேரிடர் மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்து கொள்ள உள்ளதாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.

News July 31, 2024

தென்காசி ஆட்சியர் வெளியிட்ட எண்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களின் புகார் மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு 7790019008 என்ற கட்செவி அஞ்சல் எண் (Whatsapp) 10.06.2024 முதல் செயல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மற்றும் குறைகளை மேற்கண்ட எண்ணிற்கு புகாராக தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.

News July 31, 2024

பாப்பாக்குடி வட்டார காங்கிரஸ் தலைவர் நியமனம்

image

தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி எம். எல்.ஏ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுனே, சோனியாகாந்தி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் பாப்பாக்குடி வட்டார காங்கிரஸ் தலைவராக தினகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளார்.

News July 31, 2024

தென்காசிக்கு வருகை தரும் ஜான்பாண்டியன்

image

தென்காசி மக்களவைத் தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட ஜான்பாண்டியன் தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளார். ஆகஸ்ட் 4 ஆம் தேதி பாவூர்சத்திரம், சுரண்டை , சாம்பவர் வடகரை, ஆய்க்குடி, குத்துக்கல்வலசை, தென்காசி, இலஞ்சி, செங்கோட்டை, புளியரை, இடைகால் ,கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் நன்றி தெரிவிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 31, 2024

தமிழ்நாட்டில் மீண்டும் ‘கள்’? (1/2)

image

சமீபகாலமாகவே ‘கள்’ இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக அண்ணாமலை, சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், பலதரப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில் ‘கள்’ விற்பனை மீதான தடையை நீக்க கோரிய மனுவை அரசு பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!