Tenkasi

News January 2, 2026

தென்காசி: கார் மோதி சம்பவ இடத்தியிலே பலி

image

தென்காசி ஆலங்குளம் அருகே கழுநீர்குளத்தை சேர்ந்தவர் அருள்ராம நவநீதகிருஷ்ணன் (63). இவர் நேற்று சாலையை கடக்க முயன்ற பொழுது அப்பகுதியில் வேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரக்கேரளம்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் மது போதையில் காரை ஓட்டி வந்ததாக நெல்லை டவுணை சேர்ந்த ஹரிஷ் மாதவன் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

News January 2, 2026

தென்காசி மாவட்டத்தில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

image

தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் ஜனவரி 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது. வயது முதிர்ந்தோர், மாற்று திறனாளிகள் உடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News January 1, 2026

தென்காசி மக்களே அரசு பஸ்ஸில் பிரச்னையா.?

image

தென்காசி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/ குறைகளை அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து 94875 99080 இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News January 1, 2026

தென்காசி: கடைகள் ஏல அறிவிப்பு

image

தென்காசி ஊராட்சி ஒன்றியம் பிரானூர் ஊராட்சிக்கு சொந்தமான வணிக வளாகக் கடைகளை வரும் ஜனவரி 12ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணியளவில் ஊராட்சி மன்ற அலுவலக கூட்டரங்கில் வைத்து ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் அனைத்து கடைகளும் வாடகைக்கு பொது ஏலம் விடப்பட உள்ளது. கடையை வாடகைக்கு ஏலம் எடுப்பவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று பிரானூர் ஊராட்சி தரப்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

News January 1, 2026

தென்காசி: Driving Licence-க்கு முக்கிய Update!

image

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<> இங்கு கிளிக் <<>>செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 1, 2026

தென்காசி: 10th முடித்தால் ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

தென்காசி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <>கிளிக் செய்து<<>> ஜன.8க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள வேலைவாய்ப்பு தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News January 1, 2026

தென்காசி: GH-ல் இவை எல்லாம் இலவசம்

image

தென்காசி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தென்காசி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04636-225326 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News January 1, 2026

தென்காசி: மகன் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை!

image

கடையம் அருகே ரவணசமுத்திரத்தை சேர்ந்தவர் அகஸ்தியன் (62). கடந்த ஓராண்டுக்கு முன்பு இவரது மகன் சிறுநீரக கோளாறு காரணமாக உயிரிழந்தார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்து உடலை கைப்பற்றிய கடையம் போலீசார் வழக்குப் பதிவி செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

News January 1, 2026

சங்கரன்கோவில்: கல்லூரி மாணவி தற்கொலை!

image

சங்கரன்கோவில் அருகே கருத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகள் விஜயசாந்தி (22) கல்லூரி மாணவி. குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று காலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News January 1, 2026

தென்காசி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தென்காசி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000478, 9342595660 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!