India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம் புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1 முதல் வருகிற 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். *உங்கள் பகுதி மாணவர்களுக்கு பகிரவும்*
தென்காசி மாவட்டத்தில் மழை காணப்படாததால் செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணைக்கு வினாடிக்கு 44 கன அடியாகவும், குண்டார் அணைக்கு 66 கன அடியாகவும், கருப்பாநதி அணைக்கு 5 கன அடியாகவும் ராமநதி அணைக்கு 50 கன அடியாகவும், கடனா நதிக்கு 52 கன அடியாகவும் நீர் வரத்தானது கடுமையாக சரிந்துள்ளதாக இன்று மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சங்கரன்கோவிலை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் – கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில், இன்று(ஆக.,2) இருகன்குடி கோயிலுக்கு பாதையாத்திரை சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பக்தர்கள் முருகன், மகேஷ், பவுன் ராஜ் சம்பவ இடத்திலேயை உயிரிழந்தனர். விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆலங்குளம், கடையம், தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வதை பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நிர்வாக காரணத்திற்காக மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் வனப்பகுதிக்குள் செல்ல தடை விதித்திருந்தனர். இந்நிலையில் இன்று (02/08/24)அதிகாலை முதல் அந்த தடையை நீக்கியதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கோயிலுக்கு செல்கின்றனர்.
தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகளின் இன்றைய(ஆக.,2) விலை நிலவரம்(ஒரு கிலோ): கத்தரிக்காய் ரூ.60, தக்காளி ரூ.40, வெண்டைக்காய் ரூ.60, புடலைங்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ. 60, பாகக்காய் ரூ.60, சுரைக்காய் ரூ.15, தடியங்காய் ரூ.25, பூசணிக்காய் ரூ.20, அவரைக்காய் ரூ.120, மிளகாய் ரூ.70, முள்ளங்கி ரூ.50, முருங்கைக்காய் ரூ.80, சின்ன வெங்காயம் ரூ.30, பெரிய வெங்காயம் ரூ.50, இஞ்சி ரூ.160, மாங்காய் ரூ.60.
தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் மானூர் கால்வாயில் தலைமதகில் கூடுதல் திறப்பு அமைக்கும் பணி மற்றும் மானூர் கால்வாயை செம்புலி பட்டணம் முதல் துத்திக்குளம் வரை சீரமைக்கும் பணி சுமார் ரூ.3 கோடி மதிப்பில் இன்று தொடங்கப்பட்டன. இதன் மூலம் தென்காசியில் 14 குளங்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 9 குளங்கள், 4000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாச வசதி பெறுவதாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்தார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை இன்று காணொளி காட்சி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை புதிய அலுவலக இருக்கையில் அமர வைத்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், டிஐஜி, மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்பட்டு வரும் நெல்லை டூ மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. அம்பை, தென்காசி, சிவகாசி ஆகிய வழியே இயக்கப்படும் இந்த ரயில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி கீழப்புலியூர் பகுதியை சேர்ந்த 91 வயதான மூதாட்டிக்கு விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு உடலில் பல்வேறு பிரச்னைகள் இருந்த நிலையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். தொடர்ந்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையிலான குழுவினர் நேற்று மூதாட்டிக்கு உயர்தர எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மேலசெக்கடி தெரு பகுதியில் உள்ள பழைய புத்தகக்கடைக்கு நேற்று(ஜூலை 31) சென்ற எம்எல்ஏ ராஜா, கிடைக்கப்பெறாத அரிய வகை புத்தகங்கள் மற்றும் போட்டித் தேர்வு புத்தகங்கள் உள்ளதா என விசாரித்தார். மேலும் போட்டித் தேர்வு புத்தகங்களை வாங்கி அப்பகுதியில் உள்ள நூலகங்களுக்கு இலவசமாக கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக தகவல்.
Sorry, no posts matched your criteria.