Tenkasi

News August 6, 2024

தென்காசி உழவர் சந்தை விலை நிலவரம்

image

தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் இன்றைய(ஆக.,6) விலை நிலவரம்(ஒரு கிலோ): கத்தரிக்காய் ரூ.70, தக்காளி ரூ.40, வெண்டைக்காய் ரூ.60, புடலைங்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ. 60, பாகக்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.15, தடியங்காய் ரூ.25, கேரட் ரூ.120, பூசணிக்காய் ரூ.20, அவரைக்காய் ரூ.140, மிளகாய் ரூ.70, முள்ளங்கி ரூ.50 முருங்கைக்காய் ரூ.100, சி.வெங்காயம் ரூ.40, பெ.வெங்காயம் ரூ.45, இஞ்சி ரூ.160க்கும் விற்பனை.

News August 6, 2024

திருக்குறள் முற்றோதுதல் போட்டிக்கு அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(ஆக.,5) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் முற்றோதுதல் போட்டி நடைபெற உள்ளது. இதில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பங்கேற்கலாம் என கூறியுள்ளார்.

News August 6, 2024

தென்காசியில் கள்ளச்சாராயம் ஒழிப்பு சிறப்பு கூட்டம்

image

தென்காசி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நேற்று(ஆக.,5) கள்ளச்சாராயம் ஒழிப்பு மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தை சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து போதைப்பொருளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News August 5, 2024

தென்காசி மாவட்ட மக்களுக்கு ஜில் நியூஸ்

image

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு இன்று (ஆக.05) இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு லேசான மழையும் இரவு 10 மணி வரை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2024

கோவில் பாதுகாப்பு பணி – விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்ட காவலில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் ஆளுநர்களுக்கு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தென்காசியில் 20, ஆலங்குளம் 21, புளியங்குடி 26, சங்கரன்கோவில் 9 ஆகிய பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என எஸ்பி சுரேஷ்குமார் இன்று (ஆக.05) தெரிவித்துள்ளார்.

News August 5, 2024

பூலுடையார்கோவில் தீ விபத்து; எம்.பி ஆய்வு

image

சங்கரன்கோவில் அருகே ஆண்டார்குளம் உள்ள பூலுடையார்கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று ஆறுதல் கூறினார். உடன், நிர்வாகிகள் சிவலிங்க பெருமாள், எஸ் கே எஸ் முருகன், தென்காசி வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஸ்ரீகுமார், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.

News August 5, 2024

பூலுடையார் கோயில் தீ விபத்துக்கு உரிய இழப்பீடு; எம்எல்ஏ உறுதி

image

சங்கரன்கோவில் அருகே வெள்ளாளங்குளம் பூலுடையார் சாஸ்தா கோயிலில் நேற்று முன்தினம் நடந்த கோயில் கொடை விழாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கால்நடைகள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகள் எரிந்து சேதமானது. தகவல் அறிந்த சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா நேற்று அந்த பகுதியை ஆய்வு செய்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி, உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

News August 5, 2024

தென்காசி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று(ஆக.05) அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் இன்று அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2024

மக்களைத் தேடி மருத்துவம் 4ஆம் ஆண்டு விழா துவக்கம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் 4ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நாளை 5-ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை நடைபெறவுள்ளது. இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாகவும், பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறவும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 4, 2024

தென்காசி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(ஆக.04) இரவு 7.00 மணி வரை 29 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் இன்று இரவு 7.00 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!