India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்ட காவல் காண்காணிப்பாளராக வி.ஆர்.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சங்கரன்கோவில் – ராஜபாளையம் மாநில நெடுஞ்சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த வழியில் தினமும் 12 வழக்கமான ரயில்கள், 4 வாராந்திர ரயில்கள் செல்கின்றன. ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு ரயில் இந்த வழியாக செல்வதால் கேட் அடைக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என MP ராணி ஸ்ரீகுமார் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
செங்கோட்டை ரயில் நிலையத்தில் வரும் 13 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரயில் தென்காசி வரை மட்டுமே செல்லும். செங்கோட்டையில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் தென்காசியில் இருந்து கிளம்பி நெல்லை செல்லும் மற்ற ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் நேற்று தெரிவித்துள்ளது.
தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகளின் இன்றைய(8ஆம் தேதி) விலை நிலவரம்(ஒரு கிலோ): கத்தரிக்காய் ரூ.60, தக்காளி ரூ.30, வெண்டைக்காய் ரூ.50, புடலைங்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, பாகக்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.15, தடியங்காய் ரூ.25, பூசணிக்காய் ரூ.18, அவரைக்காய் ரூ.120, மிளகாய் ரூ.70, முள்ளங்கி ரூ.50, முருங்கைக்காய் ரூ.70, சின்ன வெங்காயம் ரூ.30, பெரிய வெங்காயம் ரூ.40, இஞ்சி ரூ.150க்கு விற்பனை.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள், தாங்கள் சேமித்து வைத்த உண்டியல் பணம் ரூ.20 ஆயிரத்தை கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு பேரிழப்பு நிதியாக நேற்று(ஆக.,7) கலெக்டர் கமல் கிஷோரிடம் வழங்கினர். உடன் பள்ளி நிர்வாகி அப்துல்கரீம், மேலாண்மை குழு – முகம்மது அனீஸ், டாக்டர் ஜலீல் ஆகியோர் உடனிருந்தனர். இந்த குழந்தைகளுக்கு ஒரு பாராட்டு கொடுக்கலாமே!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகம், மேக்கரை பிரிவு வெள்ளைக்கல் தெரு பகுதியில் உள்ள காஜா மைதீன் என்பவர் தோட்டத்தில் 2 பசு மாடு & கன்றுகளை கட்டி வைத்திருந்தனர். ஆக.,6 அன்று இவர்கள் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒரு பசுமாட்டை கடித்துக் குதறி கொன்ற நிலையில், மற்றொரு மாட்டையும் கடித்துள்ளது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நேற்று ஆய்வு நடத்தினர்.
தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணியாற்றி வந்த இளவரசி இன்று (ஆக.07) அதிரடியாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு இடமாற்றம் செய்து செய்தி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட
புதிய மக்கள் தொடர்பு அதிகாரியாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய சண்முகசுந்தரம் இடமாற்றம் செய்யப்பட்டு இன்று அவர் பொறுப்பேற்புக உள்ளார்.
தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் இன்றைய(7ஆம் தேதி) விலை நிலவரம்(ஒரு கிலோ): கத்தரிக்காய் ரூ.60, தக்காளி ரூ.40, வெண்டைக்காய் ரூ.60, புடலைங்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, பாகக்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.20, தடியங்காய் ரூ.25, பூசணிக்காய் ரூ.20, அவரைக்காய் ரூ.140, மிளகாய் ரூ.70, முள்ளங்கி ரூ.50, முருங்கைக்காய் ரூ.80, சின்ன வெங்காயம் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.50க்கு விற்பனை.
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அக்டோபர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் http://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பதிவு செய்யலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(ஆக.,6) தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், மேலகரம் மற்றும் இலஞ்சி பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளை நேற்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் ஆய்வு செய்தார். தொடர்ந்து திட்ட பணிகள் குறித்த விபரங்களை கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார். உடன் திட்ட அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.