India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காவல்துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக இயங்கி வரும் தென்காசி காவலர் பல்பொருள் அங்காடியை(போலீஸ் கேன்டீன்) இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார். இதில் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் இருப்பு முறையாக உள்ளதா? தரமாக உள்ளதா? உடனடியாக பொருட்கள் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் பாடுபட்டு வீரதீர செயல்புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தகுதியின்படி 24-25 ஆம் ஆண்டிற்கு பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. இதற்காக, புரிந்த வீரதீர சாதனைகள் குறித்த விபரங்கள் மற்றும் ஆதாரங்களுடன் தமிழக அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என இன்று(நவ.,5) தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் அறிவித்துள்ளார். SHARE IT.
தென்காசி கலைஞர் அறிவாலயத்தில் நாளை(நவ.,6) மாலை 4 மணி அளவில் மாவட்ட வர்த்தக அணி தலைவர் கடையநல்லூர் நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபிபூர் ரஹ்மான் தலைமையில் நடைபெறுகிறது. முன்னாள் எம்எல்ஏவும், மாநில வர்த்தக அணி இணை செயலாளருமான முத்துச்செல்வி முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் வர்த்தகர் அணியின் பணி குறித்து பேசுகிறார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(நவ.05) வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021ஆம் ஆண்டு திருவள்ளுவர் தினத்தில் டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கான விண்ணப்ப படிவத்தை தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். நவம்பர் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்றும்(நவ.,5) கனமழை பெய்தது. இதன்படி தென்காசியில் 5.5 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 1 மில்லி மீட்டர், ஆய்க்குடியில் 17 மில்லி மீட்டர், சங்கரன்கோவிலில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக இன்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நெல்லை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்காசி மின் கோட்ட அலுவலகத்தில் இன்றும், வரும் 19ஆம் தேதி கடையநல்லூர் மின் கோட்ட அலுவலகத்திலும், 26 ஆம் தேதி சங்கரன்கோவில் மின்கோட்ட அலுவலகத்திலும் மின் குறை தீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் பயனாளர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் பகுதியில் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஒருவருக்கு பள்ளி நிர்வாகி கோபிநாத்(29) என்பவர் பாலியல் அத்துமீறல் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சங்கரன்கோவில் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற நவம்பர் 13ஆம் தேதி தென்காசி மாவட்ட பகுதிகளில் கலந்தாய்வுக் கூட்டம், அதனைத் தொடர்ந்து சாதி வாரி கணக்கெடுப்பும் சமூகநீதி மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்ள உள்ளார். விரைவில் இடம் அறிவிக்கப்படுவதாக” தெரிவித்தார்.
ஊத்துமலை அருகே உள்ள கருவந்தா கிராமத்தை சேர்ந்த செல்ல காளை மகன் சுரேஷ் (38), கூலி வேலை செய்து வரும் இவர் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று குடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றபோது மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். பின்னர் கத்தியால் தனது மனைவி சிவனம்மாள் (35) கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் நேற்று மட்டும் கடையநல்லூர் வழியாக சென்னைக்கு சுமார் 7 ரயில் புறப்பட்டு சென்றது. ஏராளமான போலீசார் ஒவ்வொரு ரயில் வருவதற்கு முன்பாக ரயில்வே தண்டவாளங்களை சோதனை செய்தனர். தண்டவாளத்தில் கல் வைக்கப்படவில்லை என்பது உறுதி செய்த பிறகு ரயில் செல்ல அனுமதிக்கப்பட்டனர் .
Sorry, no posts matched your criteria.