India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா தென்காசி இசி ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து வரும் 15ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்காக லோகோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெளியிட்டார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர், அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் நகராட்சி 8-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.டி.எஸ்.சரவணன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த இவர், தற்போது தென்காசி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா-வை சந்தித்து சால்வை அணிவித்து ஆசி பெற்றார்.
தென்காசி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளராக தர்மசீலன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் நேற்று(நவ.,6) நியமனம் செய்யப்பட்டுள்ளார். தர்மசீலன், கடையம் அருகில் உள்ள வடமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். தகவல் தொழில்நுட்ப பிரிவு திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கூட்டுறவுத் துறை சார்பில் ஆண்டுதோறும் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவ.,14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும். இதில் சிறப்பான முறையில் செயல்பட்ட நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு பாராட்டு பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி https://rcs.tn.gov.in -rcsweb என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு தென்காசி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நரசிம்மர் நேற்று தெரிவித்துள்ளார்.
சுரண்டை அருகே உள்ள குலையனேரி ஊராட்சியில் பூ பாண்டிபுரம் கிராமத்திலிருந்து சாம்பவர் வடகரை செல்வதற்கு இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையின் சந்திப்பு பகுதியில் தென்புறமுள்ள நிலத்தில் உரிமையாளர்கள், சாலை விளிம்பு வரை கரையினை வெட்டி இழுத்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதில் தக்க நடவடிக்கை எடுக்ககோரி நேற்று பூ பாண்டிபுரம்மக்கள் மக்கள் VAO முற்றுகையிட்டனர் . பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரம் தோட்டக்கலை துறை அதிகாரி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தோட்டக்கலைத்துறை மூலமாக எலுமிச்சை கன்றுகள்(ரகம் – நாடு) மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மரகன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆவணங்களை கடையம் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பெறலாம். தகவலுக்கு, 95008 85961, 73393 44770, 63819 52380 ஆகிய எண்கனை தொடர்பு கொள்ளலாம்.
சாம்பவர்வடகரை, உலககூடத் தெருவை சேர்ந்த ஆறுமுகசாமி என்பவரது மகன் உமாசங்கர், இவர் பிழைப்புக்காக அரபு நாட்டிற்குச் சென்று அங்கு தொழிலாளியாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (5.11.2024) சவூதி அரேபியா நாட்டில் இறந்துள்ளார். தாய் மற்றும் இரண்டு வயது கைக்குழந்தையுடன் அவரது மனைவி தவித்து வருகிறார். மேலும் அவரது உடலை கொண்டு வர அரசு உதவிக்கரம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கனகம்மாள் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் நெல், உளுந்து, மக்காச்சோளம், பருத்தி, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதற்கு தேவையான ரசாயன உரங்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. எனவே விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்ட மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தேவையான உரங்களை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொண்டார்.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் & கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை(நவ.7) மாலை 5.45 மணிக்குள் ONLINE வாயிலாக <
தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம் தென்காசி மாவட்ட ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் வருகிற 10ஆம் தேதி காலை 10 மணி அளவில் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில், தென்காசி மாவட்டம் முதல் மாநாடு நடைபெற உள்ளது. அனைத்து கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
Sorry, no posts matched your criteria.