Tenkasi

News November 11, 2024

தென்காசி மக்கள் குறைதீர் நாள் முகாம் விவரம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 420 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார். இதில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கலெக்டர் ஆலோசனை செய்தார்.

News November 11, 2024

தென்காசி: வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்

image

தென்காசி மாவட்ட நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில், நவ.,16,17 & 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 18 வயதை பூர்த்தி அடைந்த அனைத்து வாக்காளர்களும் புதிய வாக்காளர் அட்டையை பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் திருத்தம் வேண்டியிருப்பின் திருத்தம் செய்துகொள்ளலாம்.

News November 11, 2024

நம்பர் பிளேட் இல்லாமல் இயங்கும் கனிமவள வாரிகளால் அதிர்ச்சி!

image

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு, சட்ட விதிகளை மீறி கனரக லாரிகள் மூலம் கனிம வளம் கடத்தப்பட்டு வருகிறது. இந்த கனரக லாரிகளால் விபத்துகள் மற்றும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் நிலையில், நேற்று(நவ.,10) இரவு கீழ சுரண்டை வழியாக கனிம வளங்களை ஏற்றிச்சென்ற லாரியில் வண்டி எண் இருபுறமும் இல்லாமல் இருந்தது. விதிமுறைகளை மீறி தொடர்கதையாகி வரும் இதுபோன்ற சம்பங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News November 11, 2024

தென்காசியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

image

தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் சுப்பராஜா சேரிட்டி டிரஸ்ட் மற்றும் ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற நவ.17-ஆம் தேதி சுப்பராஜா சேரிட்டி டிரஸ்ட் வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News November 10, 2024

தென்காசி GH-ல் எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ்?

image

தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஒருவர் இன்று(நவ.,10) எக்ஸ்ரே எடுக்க வந்துள்ளார். அங்கு எக்ஸ்ரேவுக்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்த சம்பவத்தால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். கையில் எலும்பு முறிவு என வந்த நோயாளிக்கு எக்ஸ்ரே பிலிமுக்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்த மருத்துவமனை ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News November 10, 2024

குலசேகரப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவி பறிப்பு!

image

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் குலசேகரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் முத்துமாலையம்மாள். இவர் குலசேகரபட்டி ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அரசுக்கு நிதி இழப்பீடு செய்ததாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்த நிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் பஞ்சாயத்து தலைவர் முத்துமாலையம்மாளை தகுதி நீக்கம் செய்து நேற்று(நவ.,9) உத்தரவிட்டார்.

News November 10, 2024

சிவகிரி அருகே கஞ்சா அல்வா விற்ற இருவர் கைது

image

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கருவட்டாம் பாறை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தேவர்குளத்தை சார்ந்த ஈஸ்வர மூர்த்தி(21) மற்றும் 17 வயது சிறுவன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா வாங்கி வந்து சிவகிரி பகுதியில் விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் நேற்று(நவ.,9) போலீசார் கைது செய்தனர்.

News November 9, 2024

தென்காசி இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று(நவ 9)  இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 9, 2024

பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் 9,310 பேர் தேர்வு எழுதுகின்றனர்

image

தென்காசி மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு கல்வி வழங்க புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் மூலம் 10 வட்டாரங்களில் 9,310 பேருக்கு 635 மையங்களில் தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை(நவ.10) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 9, 2024

முதல்வர் மருந்தகத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழகத்தில் முதற்கட்டமாக, 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதில் தென்காசி மாவட்டத்தை பி – பார்ம், டி – பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன், மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையளத்தில் நவ.20 விண்ணப்பிக்க வேண்டும் என மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!