India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டடம் ரூ.3.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை இன்று(நவ.,12) காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர், ராணி ஸ்ரீகுமார் எம்பி, பழனி நாடார் எம் எல் ஏ யூனியன் சேர்மன் திவ்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில் பசியில்லா சங்கரன் கோவில் அறக்கட்டளை சார்பில் பனை விதைகள் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் சங்கர சுப்ரமணியன் தலைமையில் ஏராளமான இளைஞர்கள் பனை விதைகளை நடவு செய்தனர். ஒரு மணி நேரத்தில் 2500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நாளை(நவம்பர் 13) தென்காசி வருகை தருகிறார். கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 85 அடி முழு கொள்ளளவு கொண்ட கருணாநிதி அணை பகுதியில் சுற்றுலா பூங்கா அமைப்பது தொடர்பாக பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து பொட்டல்புதூர் பகுதியில் ஆய்வு மேற்கொள்கிறார் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நாளை(நவம்பர் 13) தென்காசி வருகை தருகிறார். கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 85 அடி முழு கொள்ளளவு கொண்ட கருணாநிதி அணை பகுதியில் சுற்றுலா பூங்கா அமைப்பது தொடர்பாக பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து பொட்டல்புதூர் பகுதியில் ஆய்வு மேற்கொள்கிறார் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி நடத்திய மாநில அளவிலான வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி போட்டியானது மதுரை வேளாண் கல்லூரியில் நடைபெற்றது. இதில், ஆழ்வார்குறிச்சி குட் ஷெப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விக்னேஷ் மற்றும் ராகுல் ஜூனியர் பிரிவில் 2 ஆம் பரிசு வென்று அசத்தினர். இதை தொடர்ந்து, அந்த மாணவர்களை பள்ளி தாளாளர் ஆண்டனி பாபு, பள்ளி முதல்வர், தலைமை ஆசிரிய ஆசிரியைகள் உள்ளிட்டோர் நேற்று பாராட்டினர்.
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரான ராஜா நேற்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் வைத்து நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் முதல்வர் விருதுநகருக்கு நேற்று முன்தினம் அரசு முறை பயணம் முடிந்த நிலையில் இன்று தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று (நவம்பர் 11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் இன்று செய்திக் வெளியிட்டுள்ளது. அதில், “ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தினை நாளை 12ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட காவல்துறையின் முக்கிய தொலைபேசி எண்கள் பின்வருமாறு: குழந்தைகளுக்கான உதவி எண் 1930, பெண்களுக்கான உதவி எண் 181, தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண் 9884042100, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04633 295455, அவசர உதவி எண் 100 – ஐ தொடர்பு கொள்ளலாம்.
கடையநல்லூர் கள்ளம்புலி கிராமத்தில் இன்று அதிகாலை அங்குள்ள பூ மாரியம்மன் கோவில் உண்டியலை மர்மநபர் ஒருவர் உடைத்து ஆட்டோவில் தூக்கிச் சென்றார். இதையடுத்து சிசிடிவி கேமரா பதிவை வைத்து சேர்ந்தமரம் காவல்துறை உதவி ஆய்வாளர் தீபன் குமார் தலைமையிலான போலீசார், உண்டியலை திருடிச் சென்ற கரடிகுளம் பகுதியைச் சார்ந்த கருப்பையா என்பவர் மகன் சண்முகம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.