Tenkasi

News August 23, 2024

லஞ்சம் வாங்கிய 3 போலீசார் இடமாற்றம்

image

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு லாரிகள் மூலம் கனிமவளங்கள் ஏற்றி செல்லப்படுகின்றன. அந்த லாரிகளை மறித்து போலீசார் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. அப்புகாரின் அடிப்படையில் இன்று அன்பரசன், சுப்பிரமனியன் மற்றும் ஜெயராஜ் ஆகிய 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News August 23, 2024

பழைய குற்றாலத்தில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு

image

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பழைய குற்றால அருவி பகுதியை வனத்துறையினர் வசம் ஒப்படைக்கவேண்டும் என தொடர்ந்து வனத்துறை கோரிக்கை விடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று(ஆக.,22) தென்காசி வந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பழைய குற்றாலம் அருவி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வன அலுவலர் முருகன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

News August 23, 2024

தென்காசி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை

image

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி இன்று(ஆக.,23) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கையொட்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை இன்று அறிவித்து கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டார். அரசுத் தேர்வுகள் இருப்பின் தேர்வு எழுதும் மாணவர்கள், சம்பந்தபட்ட ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு இவ்விடுமுறை பொருந்தாது.

News August 23, 2024

செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு ரயில்கள்

image

வருகிற செப்டம்பர் 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மைசூரில் இருந்து இரவு 9:20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 4:50 மணிக்கு செங்கோட்டையை சென்று அடைகிறது. மறு மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து செப்டம்பர் 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2:20 மணிக்கு மைசூருக்கு சென்றடைகிறது என தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

News August 23, 2024

ஆகஸ்ட் 29இல் இலவச திருமண விழா

image

தென்காசி மாவட்டம் ரோட்டரி கிளப் குற்றாலம் சாரல் மற்றும் இலக்கண பிழை கொடையாளர்கள் சார்பில் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் முருகன் மஹாலில் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று 5 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு அனைவரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி தருமாறு ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் டாக்டர் எஸ் முத்துராமன் இன்று கேட்டுக்கொண்டார்.

News August 23, 2024

சங்கரன்கோவில்: மின்னொளியில் ஜொலிக்கும் ராஜகோபுரம்

image

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண கோமதி அம்மாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இன்று(ஆக.22) வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று இரவு கோயிலில் ராஜகோபுரம் மின்னொளியில் ஜொலிக்கிறது காண்போர் கண்களை கவர்ந்துள்ளது.

News August 23, 2024

தென்காசியில் இலவச குரூப் 2 மாதிரித் தேர்வுக்கு அழைப்பு

image

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் வாரந்தோறும் இலவச குரூப் 2 மாதிரித் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பதிவு அவசியமில்லை. தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், மேலும் விவரங்களுக்கு 9486984369 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

News August 22, 2024

ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி, கடையநல்லூர், வீரகேரளம்புதூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் 2024ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கைக்காக வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை www.skilltraining.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

News August 22, 2024

தென்காசி மக்களுக்கு அழைப்பு விடுத்த MLA ராஜா

image

பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சங்கரன் நாராயண கோமதி அம்பாள் கோயில் சங்கரன்கோவிலில் உள்ளது. இந்த கோயிலில் நாளை வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா MLA இன்று(ஆக.,22) அழைப்பு விடுத்துள்ளார்.

News August 22, 2024

தென்காசியில் கத்தியால் கேக் வெட்டிய 3 பேர் கைது

image

தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரிகர விநாயகர் கோயில் தெருவில் வசித்து வரும் சுரேஷ் என்பவரின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரிய கத்தியால் கேக் வெட்டி அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான புகாரில் சுரேஷ், சக்திவேல், மாரியப்பன் ஆகிய 3 பேரை நேற்று(ஆக.,21) தென்காசி போலீசார் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!