India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கீழப்பாவூர் பகுதியில் கருணாகரன் மற்றும் கணபதி என்பவர் வீட்டில் நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இதில் மதுரையை சேர்ந்த கணேசன் (39), கீழப்பாவூர்சங்கரராமன் (36), தஞ்சாவூர் ரமேஷ் (42), கோவை செந்தில்குமார் (50) ஆகிய நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 157 கிராம் நகை மற்றும் ரூ.2.50 லட்சம் பணம் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தென்காசி மாவட்டம் 2024 ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இதில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 2ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மழைப்பொழிவு இல்லாததால் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடனா அணைக்கு நீர்வரத்து ஆனது வினாடிக்கு 6 கன அடியாகவும் கருப்பாநதி அணைக்கு வினாடிக்கு 5 கன அடியாகவும் ராமநதி அணைக்கு வினாடிக்கு 21 கனஅடியாக, குண்டார் அணைக்கு 14 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது என மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டார கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கல்வி கடன் பெற்று பயனடையுமாறு இன்று கேட்டுக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையில் இருந்து பெங்களூருக்கு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து, செப்.,5, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டை- மைசூருக்கும், மறுமார்க்கமாக செப்.,4, 7 தேதிகளில் மைசூர்- செங்கோட்டைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்தது. இந்நிலையில், இதனை வாராந்திர ரயிலாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு, அம்பை & கடையம் வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் வடிவேலு, முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று(ஆக.,23) கடையம் தோரணமலை முருகன் கோயிலுக்கு நடிகர் முனீஷ்காந்த் வருகை தந்து அங்கு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். தோரணமலை கோயில் பெருமையை கேள்விப்பட்டு அங்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவின் ஒரு பகுதியாக, சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஏற்பாட்டில் நேற்று(ஆக.,23) இரவு சங்கரன்கோவில் தேரடி வீதியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் 2023 – 2024 கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
புளியங்குடி காவல் நிலையத்திற்கு செல்போன் மூலம் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தலைவன்கோட்டை பகுதியைச் சேர்ந்த பூசைப்பாண்டி மகன் வெள்ளதுரை என்பவர் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவரை கைது செய்த புளியங்குடி போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர்.
சுரண்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (20). இவர் நேற்று (ஆக.23) இரவு வீரகேரளம்புதூரில் இருந்து பைக்கில் சுரண்டைக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பைக் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் உயிரிழந்தார். சுரண்டை போலீசார் விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(ஆக.24) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. கொடிக்குறிச்சி ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை, அறிவியல் கல்லூரியில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட திறன்பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
Sorry, no posts matched your criteria.