India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் (அண்ணா பதக்கம்) பதக்கங்களை பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆரோக்கியமேரி மற்றும் தலைமைக்காவலர் ராதா கிருஷ்ணன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் இன்று (ஆக.27) நேரில் அழைத்து பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் தென்காசியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதிய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு தற்போது அதன் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் நிலையில் கட்டடத்தின் ஜன்னல் பகுதியில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து சேதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சுரண்டை பீடி தொழிலாளர்கள் நலநிதி மருந்தகம் சார்பில் 2024-25 பீடி தொழிலாளர்கள் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில் என்எஸ்பி பதிவு செய்ய வேண்டும். 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்(27-08-2024). கடனா அணையின் உச்ச நீர்மட்டம் 85 அடி, நீர் இருப்பு 62.30 அடி, நீர் வரத்து 9 கன அடி, 50 கன அடி நீர் வெளியேற்றம். ராமா நதி அணையின் உச்ச நீர்மட்டம் 84 அடி, நீர் இருப்பு 68 அடி, நீர்வரத்து 24 கன அடி, 40 கன அடி நீர் வெளியேற்றம். கருப்பா நதி அணையின் உச்ச நீர்மட்டம் 72 அடி, நீர் இருப்பு 54.14 அடி, நீர் வரத்து 5 கன அடி, 5 கன அடி நீர் வெளியேற்றம்
தென்காசி அடுத்த மேலகரம் சிந்தாமணியை சேர்ந்தவர் இசக்கி மனைவி சுப்புலட்சுமி (75). நேற்று திரவிய நகர் பகுதியில் வயல் வேலைக்கு சென்று விட்டு உறவினர் ஒருவருடன் பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது குறுக்கே மாடு மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். பின்னர் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டத்தில் பயிரிடப்பட்ட சூரியகாந்தி, நன்றாக விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. சூரியன் இருக்கும் திசையை நோக்கி தனது நிலையை மாற்றிக்கொள்ளும் இந்தப் பூக்களுக்கு நடுவே செல்ஃபி எடுக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதைப் பயன்படுத்திக் கொள்ளும் வயல் உரிமையாளர்கள், ஒருவருக்கு ரூ.20 வீதம் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் கனிம வள கொள்ளை அதிகளவில் நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க வேண்டும், மக்களுக்கு ஆதரவாக மக்களை திரட்டி போராட்டம் நடத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோக்ராஜ் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்து வருகின்ற ஆக.28 அன்று சங்கரன்கோவில் தேரடி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்து பாண்டியன் இன்று தெரிவித்துள்ளார்.
செங்கோட்டை தாலுகா பண்பொழி அருகில் உள்ள கரிசல்பட்டி பகுதியில் ஒற்றை யானை அதிகாலை முதல் அப்பகுதியில் சுற்றி வருகிறது. கரிசல் குடியிருப்பு குளத்தில் பதுங்கிய யானை தனியார் தோட்டத்தில் இருந்த ஆறுமுகசாமி என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். வனத்துறையினர் யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கிழக்கு மலம்பேட்டை தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ராஜா(46). இவர், இவரது மனைவி பத்மா & செங்கோட்டையை சேர்ந்த சரவணன் ஆகியோர் சேர்ந்து அந்த பகுதியை சேர்ந்த இரு தரப்பினரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக தனித்தனி புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாரிமுத்து ராஜா, பத்மாவை நேற்று(ஆக.,25) போலீசார் கைது செய்தனர். சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.