India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி நாளை (நவ.24) ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடக்கிறது. இதில் தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார், தென்காசி எம்எல்ஏ எஸ்.பழனி நாடார், சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன் திருமலை குமார் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, வீர தீர செயல்கள் புரிந்த 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம். 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட, தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைவீர தீர செயல்கள் புரிந்திருக்க வேண்டும். மற்றும் சமுதாய பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று(நவ.,22) மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட குற்றப்பிரிவு ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் மூர்த்தி ஆய்வினை மேற்கொண்டு அறிவுரை வழங்கினார். பின்னர் அனைத்து கோப்புகளையும் சரிவர முறையாக பராமரித்து வந்த காவல்துறையினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். தென்காசி எஸ்பி ஶ்ரீனிவாசன் உடனிருந்தார்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (நவ.22) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 20.11.2024 அன்று மழையின் காரணமாக அறிவிக்கப்பட்ட விடுமுறையினை ஈடுசெய்யும் பொருட்டு நாளை (23.11.2024) சனிக்கிழமை முழு வேலை நாளாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதையடுத்து, வாக்காளர் பெயர் சேர்க்கை, நீக்கம் மற்றும் சரிபார்ப்பு முகாம் பள்ளிகளில் நடைபெறுவதால் நடைபெறுவதால், நாளை(23.11.24) தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி கலெக்டர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் முதல் கட்ட சிறப்பு முகாம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்நிலையில், இரண்டாம் கட்ட முகாம் வரும் 23.11.2024 (சனி) மற்றும் 24.11.2024 (ஞாயிறு) ஆகிய நாட்களில் வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என சரிபார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,“தென்காசி மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா டிச.,7 அன்று இலத்தூர் பாரத் கல்வியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் நடைபெறும் போட்டிகளில் இளைஞர்களும், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துமாறு” தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலங்குளம் இன்று(நவ.,22) ஏற்பட்ட விபத்தில் தலை நசுங்கி ஒருவர் உயிரிந்துள்ளார். சுப்ரமணியபுரத்தை சேர்ந்த அய்யம்பெருமாள், வேலையாக ஆலங்குளத்திற்கு நடந்து சென்றபோது, அந்த வழியாக பைக்கில் வந்த ஆண்டிபட்டி ராமர்கோவில் தெருவை சேர்ந்த சோபிராஜனிடம் லிஃப்ட் கேட்டு சென்றுள்ளார். அப்போது, பைக் மீது கணபதி பேருந்து மோதியதில் அய்யம்பெருமாள் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நாளை(நவ.,23) மாலை 5 மணிக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் பத்மநாதன் தலைமையில் நடைபெறும் என தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா அறிவித்துள்ளார். இதில் அக்கட்சி நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, இயற்கை இடர்பாடுகளால் ஏதேனும் மின் குறைபாடு இருந்தால் மின் அவசர புகார்களுக்கு 94987 94987 என்ற எண்ணை பொதுமக்கள் அழைக்கலாம். இவ்வாறு மண்டல தலைமை பொறியாளர் செல்வராஜ் நேற்று(நவ.,21) தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.