Tenkasi

News November 26, 2024

தென்காசி இரவு காவல் ரோந்து பணி விபரம் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (நவ.25) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 25, 2024

நோய் பரவலை தடுக்க முக கவசம் அணிய -ஆட்சியர் தகவல்

image

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இதனால் எலி காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, காய்ச்சல் சளி இருப்பவர்கள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தகுந்த சிகிச்சை பெறவும் முக கவசம் அணியவும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிவுறுத்தினார் .

News November 25, 2024

கடைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும்

image

தென்காசி மாவட்ட குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத் தலைவர் அன்பழகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“மத்திய அரசு ஏற்கனவே ஜிஎஸ்டி என்கிற பெயரில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வாடகை செலுத்தி கடை நடத்துவோர் கடை வாடகைக்கு மாதந்தோறும் 18% ஜிஎஸ்டி வழியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறையை திரும்ப பெற வேண்டும்” என வலியுறுத்தினார் .

News November 25, 2024

தென்காசியில் மலையேற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு

image

தென்காசி மாவட்டத்தில் Trektamilnadu திட்டத்தின் கீழ் குற்றாலம் செண்பகாதேவி அருவிக்கு மலையேற்றம் மேற்கொள்ள விரும்புவர்கள் <>https://www.trektamilnadu.com/<<>> என்ற இணையத்தில் விண்ணப்பித்து அனுமதி வாங்கி மலையேற்றம் செய்யலாம். கட்டண தொகையாக ஒரு நபருக்கு 699 ரூபாய் + 5% ஜிஎஸ்டி. தீர்த்த பாறையில் மலையேற்றம் செய்ய விரும்புபவர்கள் இதே இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். கட்டணத் தொகை ஒரு நபருக்கு 799 ரூ.

News November 25, 2024

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

image

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய காலை நிலவரப்படி 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 68 அடி, 85 அடி முழு கொள்ளளவு கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம் 57.50 அடி 72 அடி கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 47 அடி, குண்டார் அணை நீர்மட்டம் 36 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 53.25 அடியாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

News November 25, 2024

உதயநிதி பிறந்தநாளை எழுச்சி நாளாக கொண்டாட முடிவு

image

சங்கரன்கோவில் MLA ராஜா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், நவ.,27ஆம் தேதி துணை CM உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக சார்பில் 100 நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒன்றிய நகர பேரூர் பகுதியில் புதிய கொடி கம்பங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தி பொதுமக்களுக்கு நடத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்றும், அந்நாளை எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

News November 25, 2024

ஆலங்குளம்: கேரள கனிமவள லாரிகள் மீது கல் வீசி தாக்குதல்

image

ஆலங்குளம் அருகே உள்ள மருதமுத்தூரில் இருந்து முக்கூடல் செல்லும் சாலையில் நேற்று(நவ.,24) கேரள மாநில பதிவெண்கள் கொண்ட லாரிகள் எம்சாண்ட் ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்கள் ஏற்றி கேரளாவுக்கு சென்றன. மருதமுத்தூரை அடுத்த ராம் நகரில் லாரிகள் சென்றபோது 2 இளைஞர்கள் கல் வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் லாரியின் கண்ணாடி சேதமடைந்தது. 2 இளைஞர்களையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 25, 2024

விவசாய சங்க தேர்தலுக்கான அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சிற்றாறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட 23 விவசாய சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் வேட்பு மனுக்களை தொடர்பு உடைய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் வருகிற நவ.,27,28 தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம். 28ஆம் தேதி மாலை 4 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

News November 25, 2024

தென்காசி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி, ஆலங்குளம் ஆகிய நான்கு உட்கோட்ட பிரிவுகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் பட்டியலை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு 100 என்ற எண்ணை அழைத்து தகவல் சொல்லலாம் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News November 25, 2024

பொதிகை புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள்

image

தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இன்று (24.11.2024) 3-வது பொதிகை புத்தக திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!