India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டம் கெட்டூர் பகுதியை சேர்ந்தவர் மாது(55). இவர் நெல்லையில் தங்கி, கோழிகளை மொத்தமாக எடுத்து சந்தைகளில் கொண்டு விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், இவர் இன்று(செப்.,14) காலை ஆலங்குளம் மாறாந்தை பகுதியில் பைக்கில் கோழிகளை விற்பனைக்காக கொண்டு சென்றபோது எதிர்பாராத விதமாக பைக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் கொலை வழக்கின் குற்றவாளிகளான ராமநாதபுரம் வண்டலூர் கிழக்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் அருண் பாஸ்கர்(25) மற்றும் வடக்கு தெருவை சேர்ந்த அமல்ராஜ் என்பவரின் மகன் முத்துக்குமார்(25) ஆகியோரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி பரிந்துரையின் பேரில் ஆட்சியர் உத்தரவிட்டார்.
தென்காசி மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் ராஜேஸ்வரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்ட கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் 19 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு மத்திய அரசு சான்றிதழுடன் கூடிய சிசிடிவி பொருத்துதல் பழுது நீக்குதல் குறித்த இலவச பயிற்சி வகுப்பு வரும் செப் 18ஆம் தேதி தொடங்கி 13 நாட்கள் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் அறிவுறுத்தலின்பேரில் கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இன்று தமிழக-கேரளா எல்லையில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. புளியரை மற்றும் மேக்கரை சோதனை சாவடிகளில் தமிழகம் & கேரளா காவல் துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. நெல்லை & தென்காசி மாவட்டம் உட்பட 9 தாலுகாக்களில் நடத்தப்படும் இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன இழப்பீடு வழக்குகள் உள்ளிட்டவை குறித்து சமரச பேச்சு வார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மாவட்ட கூடுதல் சார்பு நீதிபதி தெரிவித்துள்ளார்.
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் சுருதி பணியில் சேர்ந்து 10 மாதத்திற்குள் இன்றுடன் நூறாவது பிரசவம் பார்த்து சிறந்த இலக்கை நிறைவு செய்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2024 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் கல்லூத்து கிராமத்தை சேர்ந்த அபிநயா 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 11.77 நொடிகளில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த தொடரில் இதற்கு முன்பாக 2018ம் ஆண்டு இலங்கை வீராங்கனை அமஷா சில்வா 11.92 நொடிகளில் இலக்கை அடைந்தார். இந்த சாதனையை அபிநயா முறியடித்துள்ளார்.
தமிழக எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக தினமும் கேரள மாநிலத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் பல்வேறு விதமான பொருட்களை ஏற்றிச் சென்று வருகின்றன. இந்நிலையில், இன்று(செப்.12) காலை கேரள மாநிலத்திற்கு சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி இசக்கி அம்மன் கோயில் தாண்டி குரங்கு நடை ஓடை பகுதியில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளனது. இதில் டிரைவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. புளியரை போலீசார் விசாரிக்கின்றனர்.
சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லுாரை சேர்ந்தவர் வெளியப்பன்(52). அ.தி.மு.க., பிரமுகர். இவரது மனைவி மாரிச்செல்வி. கடந்த முறை மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் துணை சேர்மனாக இருந்தார். கடந்த 8ஆம் தேதி வெளியப்பன் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், இவ்வழக்கில் தேடப்பட்டவர்களில் அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன், கோவேந்திரன் ஆகியோரை மேலநீலிதநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
வாசுதேவநல்லூரில் தேவேந்திர குல வேளாளர் அரசு ஊழியர் சங்கம் சார்பில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தேவேந்திரகுல சமுதாய நாட்டாமைகள், தேவேந்திர குல அரசு ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கணேஷ், குமார், தர்மராஜா மற்றும் புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.