Tenkasi

News September 15, 2024

ஆட்சியர் ஆய்வுக்குப் பின் பாதியில் நின்ற இடுகாடு கட்டும் பணி

image

செங்கோட்டை அருகில் உள்ள புதூர் பேரூராட்சிக்கு சொந்தமான கீழப்புதூர் பகுதியில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் நிறைந்து காணப்படுகின்றனர். இந்த மக்களுக்காக தனியாக சுடுகாடு இல்லாத நிலை நீடித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியாளரின் உத்தரவைத் தொடர்ந்து இடுகாடு கட்டும் பணி நடைபெற்றது. இந்நிலையில் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பிறகு இடுகாடு கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

News September 15, 2024

கருணாநிதி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி

image

தென்காசி மாவட்டம் தென்கிழக்கில் தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் இன்று திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி உருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திராவிட கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 15, 2024

தென்காசியில் 17ஆம் தேதி மதுக்கடைகள் மூடல்

image

மிலாடி நபி வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபான கூடங்கள் மூடப்பட்டிருக்கும். 17ஆம் தேதி அன்று மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.

News September 15, 2024

மினி பேருந்துகள் இயக்க வழித்தடங்கள் கண்டறிய உத்தரவு

image

தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளுக்கு மினி பேருந்துகள் இயக்குவதற்கு தகுதியான வழித்தடங்களை கண்டறிந்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரில் அணுகி விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

News September 15, 2024

7 வயது சிறுமி மாநில ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதி

image

தென்காசி மாவட்டம் தலைவன் கோட்டையை சேர்ந்த மு.ஜெயகணேசன் கோகிலா என்பவர்களின் மகள் J.முவித்ரா(7) ஸ்கேட்டிங் போட்டியில் மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார். அவருக்கு இன்று பயிற்சியாளர், சமூக ஆர்வலர்கள், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

News September 15, 2024

தென்காசி மாவட்டத்தில் 16,191 குரூப் தேர்வு எழுதினர்

image

தென்காசி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வுக்காக 20,870 பேர் வின்னப்பித்திருந்தனர். இந்நிலையில், நேற்று(செப்.14) நடைபெற்ற குரூப் 2 தேர்வில் 16,191 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 4,679 பேர் பங்கேற்கவில்லை. இந்த தேர்வானது தென்காசி மாவட்டத்தில் 82 தேர்வு மைங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News September 15, 2024

ஆழ்வார்குறிச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்

image

ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி மருத்துவமனை, பரம கல்யாணி கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற 17ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பரம கல்யாணி மருத்துவமனையில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

News September 14, 2024

தென்காசி: சைபர் கிரைம் குறித்து காவல்துறை அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது பல்வேறு வலைதளங்களில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன; சைபர் குற்றவாளிகளால் நீங்கள் ஏமாற்றப்பட்டால், உடனடியாக 1930 என்று எண்ணை தொடர்பு கொள்ளவும்; அல்லது <>https://www.cybercrime.gov.in/<<>> என்ற இணைய முகவரியில் புகார் செய்யலாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 14, 2024

தப்பிய கைதியை பிடித்த போலீசாருக்கு எஸ் பி பாராட்டு

image

தென்காசி_கிளைச்சிறையில் இருந்து கைதி ஒருவர் இன்று தப்பி ஓடினார். தென்காசி சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் இரண்டாம் நிலை காவலர் மாடசாமி ஆகியோர் ஒரு மணி நேரத்தில் கைதியை விரட்டி பிடித்து சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு கைதியை பிடித்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டினார்.

News September 14, 2024

டிஎன்பிசி தேர்வு மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

image

தென்காசி மாவட்டம், செய்யது ரெசிடென்சியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில், இன்று ( செப்டம்பர்14) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – II (தொகுதி-II & IIA பணிகள்) – இல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!