Tenkasi

News March 18, 2024

தென்காசி:அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்

image

தென்காசியில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.மேற்படி கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் “சுவிதா ” என்ற செயலியில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பொதுக் கூட்டங்கள்,கட்சி ஊர்வலங்கள் ஆகியவற்றிற்கு அனுமதி பெறும் முறைகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தனர்.

News March 17, 2024

தென்காசி: 2,220 ஆண்டு பழமை வாய்ந்த பானை!

image

தென்காசி மாவட்டம் அருகே கடையம் பகுதியில் சுமார் 2,220 ஆண்டுகளுக்கு முற்பட்டு மிகப்பழமையான மக்கள் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் வாழ்ந்த இடத்தில் கல்லூரி பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் ஆய்வு நடத்தியதில் பழமையான வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதில் பானைகள், தங்கவளையம், கிண்ணம் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

News March 17, 2024

தென்காசி மக்கள் குறைதீர் நாள் முகாம் ரத்து 

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 24ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் கிராமப்பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

தென்காசி: தெருநாய்கள் தொல்லை!

image

தென்காசி, சுரண்டை பழைய மார்க்கெட் பகுதியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதுடன் அப்பகுதிகளில் செல்லும் பொதுமக்களை விரட்டுவதும் , துரத்தி கடிப்பதுமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மக்களின் நலனை கருதி சுரண்டை நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News March 17, 2024

தென்காசியில் அதிகாரிகளோடு ஆட்சியர் ஆலோசனை

image

தென்காசி, வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன் ஏற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 12 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது.

News March 17, 2024

தென்காசி:கலெக்டர்,எஸ்பி எச்சரிக்கை

image

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் எஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில்,தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அரசியல் கட்சி சார்ந்த விளம்பரங்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்

News March 17, 2024

தென்காசியில் 203 பேர் சிக்கினர்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் நேற்று  தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 15 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர்

News March 16, 2024

தென்காசி கலெக்டர் அறிவிப்பு

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் படைக்கலன் (துப்பாக்கி) உரிமம் பெற்ற அனைத்து உரிமதாரர்களும் , தங்கள் வசம் வைத்துள்ள உரிமம் பெற்ற படைக்கலனை (துப்பாக்கியை) அருகில் உள்ள காவல் நிலைய பொறுப்பு அலுவலரிடம் தவறாமல் உடனடியாக ஒப்படைக்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 16, 2024

தென்காசி: வட்டார அளவிலான விளையாட்டு போட்டி

image

பாவூர்சத்திரம் த.பி சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா மற்றும் வெஸ்டர்ன் கார்ட்ஸ் இந்தியன் அகாடமி இணைந்து நடத்திய வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டி இன்று நடந்தது. விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

News March 16, 2024

தென்காசி: திமுக சார்பில் விளையாட்டு போட்டி

image

பாவூர்சத்திரத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ் தலைமையில் கஷ்டம் ஹாட் இந்தியன் அகாடமி அமைப்பின் மூலம் இன்று வட்டார அளவிலான கராத்தே, சிலம்பம், யோகா, குங்பூ விளையாட்டு போட்டிகள் நடந்தன.    போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் துவக்கி வைத்தார் ஒன்றிய செயலாளர் சீனித்துரை ஒன்றிய சேர்மன் காவேரி சீனித்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.