India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி: பங்குனி உத்திர நாளை முன்னிட்டு மார்ச் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்திலும் ஏற்கனவே அதே நாளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சங்கரன்கோவில் கோமதி சங்கர் காலனியை சேர்ந்தவரான டாக்டர் ராணி ஸ்ரீகுமார், அரசு மருத்துவராக உள்ளார். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றி வரும் இவர், 2024 மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க சார்பில் வேட்பாளராக களமிறங்க உள்ளார். இவரின் கணவர் ஸ்ரீகுமார் தி.மு.க விவசாய அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி குறித்து அறிவிப்பு வெளியிட்டதையொட்டி தென்காசி தொகுதியில் தாமரை சின்னத்தில் தமமுக தலைவர் ஜான் பாண்டியன் வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.அதே போல் தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சங்கரன்கோவிலைச் சேர்ந்த அரசு மருத்துவர் ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் மருத்துவர் ராணிஸ்ரீ குமார் வைகோவின் தாயார் மாரியம்மாளின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் இல.சுதாபாலசுப்பிரமணியன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் இராஜா, குருவிகுளம் ஒன்றிய பெருந்தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தென்காசி மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் இன்று தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 219 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 11 இடங்களில் நடந்தது.
தென்காசி சட்டமன்றத் தேர்தல் அலுவலகத்தில் இன்று மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட்ட சமத்துவ கட்சியின் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த மாநில மாவட்ட நகர நிர்வாகிகளை பாஜகவினர் வரவேற்றனர்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி குறித்து அறிவிப்பு வெளியிட்டதையொட்டி தென்காசி தொகுதியில் தாமரை சின்னத்தில் ஆனந்தன் மற்றும் தமமுக தலைவர் ஜான் பாண்டியன் இருவருக்கும் ஆதரவான போஸ்டர் யுத்தம் நடைபெற்ற நிலையில் கூட்டணிக்காக ஜான்பாண்டியன் தென்காசி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல், தென்காசி(தனி) தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீ குமார் போட்டியிடவுள்ளார். மயக்கவியல் நிபுணரான இவர் முதன் முறையாக தேர்தலில் களம் காண்கிறார். 2002 முதல் திமுக-வில் இணைந்து பணியாற்றி வருகிறார். தென்காசி தொகுதிக்கு வேட்பாளராக, எம்.பி தனுஷ் குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வி உட்பட பலர் முயற்சி செய்த நிலையில் இவர் தேர்வாகியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சங்கரன்கோவிலை சேர்ந்த டாக்டர் ராணி ஸ்ரீகுமார் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் 20ம் தேதி மாலையில் அவர் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார் உடன் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் உடனிருந்தனர்
Sorry, no posts matched your criteria.