Tenkasi

News October 29, 2024

2025 ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ஆலங்குளம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான 2025ஆம் ஆண்டு சுருக்க திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று 10:30 மணி அளவில் வெளியிடுகிறார்.

News October 29, 2024

தென்காசி பெயின்ட் குடோனில் தீ விபத்து

image

தென்காசி நகராட்சி கூலக்கடை பஜார் தெரு மேல முத்தாரம்மன் கோயில் அருகே பெயிண்ட் மற்றும் ப்ளாஸ்டிக் குடோனில் இன்று(அக்.29) காலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் தென்காசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

News October 29, 2024

நிவாரண பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி கமல் கிஷோர் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“தேசிய நெடுஞ்சாலை திருமங்கலம் – கொல்லம் நான்கு வழி சாலை பணிகளுக்காக நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக நில உடமை தாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகைக்கு ஆவணங்கள் பெறும் பணிக்காக செங்கோட்டை வட்டத்தில் 4ஆம் தேதியும், பண்பொழி கிராமத்தில் 5 ஆம் தேதியும் வடகரையில் 6 ஆம் தேதியும் முகாம் நடைபெற உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

News October 29, 2024

தென்காசி மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட அனைத்து வங்கிகளின் சார்பில் ஜன் சுரக்ஷா திட்டத்தின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக் பீமா யோஜனா என்ற காப்பீட்டு திட்டம் குறித்த முகாம் அனைத்து ஊராட்சிகளிலுமு் மநடைபெற உள்ளது. அக்டோபர் 15 முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை இந்த முகாம்கள் அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் எனகலெக்டர் கமல் கிஷோர் நேற்று கேட்டுக்கொண்டார் .

News October 29, 2024

சுருக்க திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் 2025ம் ஆண்டிற்கான சுருக்க திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட உள்ளார். 

News October 28, 2024

தென்காசி ரோந்துப்பணி விவரங்கள் வெளியீடு

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் (அக்.28) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 28, 2024

தென்காசியில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

image

வல்லம் புரோட்டா கடையில் பிரச்சனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வல்லத்தை சேர்ந்த சுபாஷ்கண்ணா (26), புளியரையில் புகையிலை பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செங்கோட்டை லிங்கராஜ் (33) மற்றும் புளியங்குடி கொலை முயற்சி வழக்கில் குற்றவாளியான ரத்தினபுரி ஷாஜி (45) ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்பி ஶ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

News October 28, 2024

எஸ்பி தலைமையில் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

image

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் தென்காசி மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள், “ஊழலை தடுக்கும் பொருட்டு அனைத்து செயல்களிலும் நேர்மையையும் சட்ட விதிகளையும் பின்பற்றுவேன், லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன்” என உறுதிமொழி ஏற்றனர்.

News October 28, 2024

சங்கரன்கோவிலில் கொள்ளையடித்த இருவர் சிக்கினர்

image

சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டி பகுதியை சேர்ந்த லட்சுமி மற்றும் கண்ணகி ஆகியோரது வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 40 பவுன் நகைகள் கொள்ளை போனது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், சிவகங்கையை சேர்ந்த தங்கராஜ் (42) மற்றும் அஜித்குமார் (24) ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை எஸ்.பி. சீனிவாசன் பாராட்டினார்.

News October 28, 2024

தென்காசியில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் பெறப்பட்ட மனுக்களை உரிய நடவடிக்கைக்காக அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.