Tenkasi

News September 29, 2024

பரிசளிப்பு விழா ஒத்திவைப்பு -ஆட்சியர்

image

தென்காசி மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக இன்று நடைபெற இருந்த முதலமைச்சர் கோப்பைக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சியானது தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கிஷோர் நேற்று தெரிவித்துள்ளார்.

News September 29, 2024

தென்காசி மாவட்ட மாஜி மா.செ நன்றி

image

ஆலங்குளம் அருகே தெற்கு காவலாகுறிச்சி மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இரட்டை குளம் கால்வாய் திட்டத்திற்கு தற்போது ரூ 18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் சிவ பத்மநாதன் இன்று நன்றி தெரிவித்துள்ளார்.

News September 29, 2024

புளியங்குளத்தில் புதிய பள்ளி கட்டடம் கட்ட அடிக்கல்

image

புளியங்குளம் ஏபிஏசி நடுநிலைப்பள்ளிக்கு
ஏசிஇ மைக்ரோமெட்டிக் கம்பெனி சார்பில், சுமார் ரூ.15 லட்சம் சிஎஸ்ஆர் நிதி, ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ 21லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
விழாவில் திருச்சி எம்பி துரை வைகோ தலைமை வகித்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். துணைபொது செயலாளர் திமு. இராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

News September 28, 2024

தென்காசியில் 4 டவுன் பஞ்சாயத்துகள் தரம் உயர்வு

image

தென்காசி மாவட்டத்தில் குத்துக்கல்வலசை, கடையம், கரிவலம்வந்த நல்லூர் மற்றும் பாவூர்சத்திரம் என 4 புதிய டவுன் பஞ்சாயத்துகளை உருவாக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. எல்லை அளவீடு உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் தென்காசி மாவட்டத்தில் புதிய டவுன் பஞ்சாயத்துகள் உருவாக்கப்படும் என இன்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

News September 28, 2024

தென்காசி அருகே அகத்தியர் ஞானபீடத்தில் சிறப்பு வழிபாடு

image

தென்காசி காசி மேஜர்புரம் திரு குற்றாலநங்கை அம்மன் திருக்கோயில் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஞானபீடத்தில் வரும் 5 ஆம் தேதி சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு அய்யர்மலை ஸ்ரீவித்யா ஆதிகுரு நவநாத சித்தர் பீடம் ஸ்ரீ சுவாமி சிவயோகி சச்சிதானந்த நாத் குரு மகாசனி தானம் வடபாதி ஆதீனம், இலஞ்சி ராஜா அபிராமி அம்மை அருளாளர் ஆகியோர் ஆசி வழங்கி தொடங்கி வைக்கின்றனர்.

News September 28, 2024

தென்காசியில் கனமழை!

image

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று(செப்.,28) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர், மதுரை, தேனியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மழை நீர் தேங்கவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் குடையுடன் செல்வது நல்லது. SHARE IT.

News September 28, 2024

ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று பேர் தற்கொலை

image

தென்காசி ஆய்க்குடி அருகே உள்ள கம்பளி பகுதியை சார்ந்த முருகேசன் என்பவர் விபத்தின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுமன உளைச்சலில்இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் எங்கே சென்றார் என தெரியவில்லை. இந்நிலையில், நேற்று இரவு முருகேசனின் மகன் தோட்டத்தில் பார்த்தபோது அவரது தந்தை, தாத்தா, பாட்டி ஆகிய 3 பேரும் இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்

News September 27, 2024

அரசு விதிகளின்படி பெயர் பலகை: நகர மன்ற தலைவர்

image

தென்காசி நகர்மன்ற தலைவர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு அரசு விதிகளின்படி தென்காசி நகராட்சிகளுக்கு உட்பட்ட கடைகள் வணிக உணவு நிறுவனங்கள் பெயர் பலகை 5:3:2 என்ற அடிப்படையில் அமைய வேண்டும். இதில் தமிழ் மொழி தமிழ் எழுத்துக்கள் முதலாவதாகவும், ஆங்கிலம் இரண்டாவதாகவும், பிற மொழிகள் மூன்றாவதாகவும் இடம்பெற வேண்டும் என்ற விதிகளை பின்பற்றி பெயர் பலகைகள் அமைக்க வேண்டும் என்றார்.

News September 27, 2024

தென்காசி அணைகளுக்கு நீர்வரத்து கடும் சரிவு

image

தென்காசி மாவட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் நீர் துடிப்பு பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் நீர்வரத்து குறைந்து அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ளது. குண்டாறு அணைக்கு வினாடிக்கு 16 கன அடி, ராமநதிக்கு 21 கன அடி, கடனா அணைக்கு 10 கன அடி, அடவி நயினார் அணைக்கு 11 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 27, 2024

இன்று தேசிய புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று(செப்.27) காலை 10 மணி அளவில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறையின் மூலம் தேசிய புகையிலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தொடக்கி வைக்க உள்ளார் என செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!