India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, சாலை மற்றும் பாதுகாப்பு, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ஒழிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று (அக்.1) நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை வகித்தார். தென்காசி எஸ்பி ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தென்காசி தெற்கு மாவட்ட மகளிரணி பொது உறுப்பினர்கள் படிவங்களை திமுக அமைப்பு இணைச்செயலாளர் அன்பகம் கலை முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமை நிலைய மேலாளர் தனபாலிடம் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் நேற்று (அக்.1) வழங்கினார்.
தென்காசி மாவட்டத்தில் இன்று (அக்.1) காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். தென்காசி டிஎஸ்பி நாக சங்கர் புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேஷ் ஆகியோர் இரவு 10 மணியிலிருந்து நள்ளிரவு 2 மணி வரையிலும், ஆலங்குளம் டிஎஸ்பி பர்ணபாஸ் சங்கரன்கோவில் டிஎஸ்பி அறிவழகன் ஆகியோர் அதிகாரி 2 மணி முதல் 6 மணி வரையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவசர உதவிக்கு 9884042100, 04633395455 அழைக்கலாம்.
தென்காசி மாவட்டம் சிவகிரியில் புதிய மின் இணைப்பு பெற 5000 ரூபாய் லஞ்சம் பெற்ற உதவி மின்பொறியாளர் முத்துக்குமார் மற்றும் மின் ஊழியர் மருது பாண்டி ஆகிய இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மாரிமுத்து என்பவர் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலத்திற்கு மின் இணைப்பு தர 35,000 லஞ்சம் கேட்டுள்ளார் உதவி மின்பொறியாளர் முத்துக்குமார்.
தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் நேற்று(செப்.,30) வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்.,2ம் தேதி காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்து மதுபானக் கூடங்களில் மதுபானம் விற்பனை ஏதும் இயங்காது. மீறி மதுபானம் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளிக்க வந்திருந்தனர். இந்நிலையில் 2 நபர்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததை தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு சோதனைக் காவலர் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலையிலும் நேற்று (செ.29)இரவு பெய்த காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் அருவிகளில் குளிக்க தடை இன்று(செ.30) காலை தடை விதித்திருந்தது. இந்நிலையில், தற்போது மெயின் அருவியை தவிர மற்ற அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது விதி செலவீனம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ,தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வதை குறித்து விவாதித்தல் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
தென்காசி தொகுதி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீ குமார் தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேற்று(29ம் தேதி) மாலையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர்களுடன் உடன் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் பொறுப்புகள் இருந்தனர்.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காவலாகுறிச்சி கிராமத்தில் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலையரங்கம் திறப்பு விழா இன்று காலை நடந்தது. விழாவிற்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்து திறந்து வைத்தார். உடன் மாவட்ட திமுக பொறியாளர் அணி நிர்வாகி மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.