Tenkasi

News October 21, 2024

தீபாவளி சிறப்பு ரயில் இயக்க பாஜக சார்பில் மனு

image

கோவை, திருப்பூர் தொழில் நகரங்களில் தென் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு மக்கள் நலன் கருதி கோவை, நெல்லை, கரூர் தென்காசி வழியாக இரு மார்க்கங்களிலும் தீபாவளி சிறப்பு ரயில் இயக்க பாஜக மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு நேற்று கடிதம் எழுதி உள்ளார்.

News October 21, 2024

தென்காசி: வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி

image

தென்காசி மாவட்டத்தில் நேற்று(அக்.,20) ஒரே நாளில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலக்கடையநல்லூரை சேர்ந்த மணிகண்டன் பைக்கில் செல்லும்போது எதிரேவந்த வாகனம் மோதியதில் தலையில் காயமடைந்து தென்காசி மருத்துவமனையில் உயிரிழந்தார். கே.ஆலங்குளம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி முத்துலட்சுமி கார் மோதி பலியானார். சிவகிரியிலும் வாகனம் மோதி தளவாய் என்பவர் சம்பவ இடத்தில் பலியானார்.

News October 21, 2024

சுரண்டை நகராட்சியில் விழிப்புணர்வு கூட்டம்

image

சுரண்டை நகராட்சி அலுவலக கூட்டரங்கில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்ட பொது சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நேற்று(அக்.,20) நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் ராமத்திலகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட நகராட்சி தலைவர் வள்ளி முருகன் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் அதிகமாக விதிக்கப்படும் என எச்சரித்தார்.

News October 21, 2024

3ஆவது முறையாக சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

image

அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தடுத்து நிறுத்த வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி போராட்டம் அறிவித்திருந்த நிலையில், 3ஆவது முறையாக இன்று(அக்.,21) மாலை 4 மணிக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்(DRO) தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு இயற்கை வள பாதுகாப்புச் சங்க பொதுச்செயலாளர் ஜமீன் கேட்டுக்கொண்டார்.

News October 20, 2024

தென்காசி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் (அக்.,20) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது.‌ அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 20, 2024

சிவகிரி காவல் நிலையத்தில் தென்காசி SP ஆய்வு

image

தென்காசி மாவட்ட எஸ்பி சீனிவாசன் நேற்று(அக்.,19) மாலை சிவகிரி காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். சிவகிரி மெயின் சாலையில் கட்டப்பட்டு வரும் சோதனை சாவடியை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். சோதனைச் சாவடி அருகே 2 பக்கமும் பேரிக்காற்று விளக்குகள், 2 பக்கமும் லைட் வசதிகள் வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.

News October 20, 2024

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட தென்காசி SP ஸ்ரீனிவாசன்

image

தென்காசி உட்கோட்டத்தில் ஆய்க்குடி, தென்காசி போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் புளியங்குடி உட்கோட்டத்தில் கடையநல்லூர், சேர்ந்தமரம் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் கவாத்து பயிற்சியினை SP ஸ்ரீனிவாசன் ஆய்வு செய்தார். காவலர்களுக்கான உடை, பொருட்களுக்கான ஆய்வு நடைபெற்றது.

News October 19, 2024

தென்காசியில் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதிற்கு தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர், விளையாட்டு போட்டிகளை நடத்தும் நடத்துனர், ஒரு நிர்வாகி, ஒரு ஆட்ட நடுவர் ஆகியோர் வருகிற 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

News October 19, 2024

தென்காசி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

image

தென்காசி மாவட்டத்தில் மாசற்ற விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுமாறு ஆட்சியர் கமல் கிஷோர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த செய்திகுறிப்பில்; அதிக அளவு மாசு ஏற்ப்படுத்தும் பட்டாசுகள், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் . அதேபோல், அரசு உத்தரவின்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் வெடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News October 18, 2024

தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.

image

தென்காசி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு அரசு அறிவித்த காலை 6-7 மாலை 7-8 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும்;. மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், சரணாலயங்கள் உள்ள பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும் என ஆட்சியர் கமல்கிஷோர் இன்று 18ம் தேதி அறிவிப்பு.

error: Content is protected !!